Home Tamil Movie News கமல் தயாரிப்புல இருந்த 4 படமும் ட்ராப்.. தலைவன் சிம்பு உள்ள வந்தாரு.. சோலி முடிஞ்ச்!

கமல் தயாரிப்புல இருந்த 4 படமும் ட்ராப்.. தலைவன் சிம்பு உள்ள வந்தாரு.. சோலி முடிஞ்ச்!

kamalhaasan- Simbu- Nayanthara
kamalhaasan- Simbu- Nayanthara

kamalhaasan: ‘வள்ளி’ என்ற திரைப்படத்திற்கும், ‘பாபா’ படத்திற்கும் ரஜினி திரைக்கதை எழுதினார். இவ்விரண்டு படங்களும் தோல்வி என்றாலும், சொந்தப் பணம் போட்டு படமெடுத்த ‘பாபா’ படுதோல்வி அடைந்ததால் தயாரிப்பில் சூடு பட்டுக் கொண்டார். அதேபோல், மற்ற முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்றோர் தயாரிப்பு பக்கம் கால் வைக்காமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், கமல்ஹாசன் இதை இப்போது அல்ல கடந்த 1981 ஆம் ஆண்டு ராஜ்கமல் தன் அண்ணன் சந்திரஹாசனோடு இணைந்து ராஜ்கமல் இண்டர்நேசனல் நிறுவனத்தை தொடங்கினார்.

இன்று இந்த நிறுவனம் இந்திய சினிமாவில் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமாக வளர்திருக்கிறது. ராஜ்கமல் இண்டர்நேசனல் நிறுவனம் ராஜபார்வை என்ற முதல் படத்தை தயாரித்தது. அதன்பின்னர், ஹே ராம், மும்பை எக்ஸ்பிரஸ்ம் விஸ்வரூபம், தூங்காவனம், உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.

கமலின் படங்களை மட்டுமே தயாரித்து வந்த இந்த நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தயாரித்தது. இதைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படம் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதேபோல், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஜோடி கூறிய கதையில் இம்ப்ரஸ் ஆன கமல் அவர்களை இயக்குனர் ஆக்குவதாக கூறி ‘கமல்237’ படத்தின் அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளியானது. ஆனால் இப்படம் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இப்படத்தை கைவிட ராஜ்கமல் இண்டர்நேசனல் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், ராஜ்கமல் இண்டர் நேசனல் நிறுவனம் தயாரிப்பில், சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி தயாரிப்பில் உருவாக இருந்த பிரமாண்ட படமும் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு படம் ராஜ்கமல் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படமும் கைவிட்டது.

அடுத்ததாக நயன்தாரா- கவின் நடிப்பில் லோகேஷ் கனகராவின் உதவியாளர் விஷ்ணு இடவன் இயக்கத்தில் ஒரு படத்தை ராஜ்கமல் இண்டர் ‘நேசனல் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்படமும் கைவிடப்பட்டது. தற்போது பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் ‘எல்.ஐ.கே’ என்ற படத்தையும், கவின்- நயன்தாரா இணைந்துள்ள படத்தையும் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ராஜ்கமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு கமிட்மண்ட் கொடுத்து அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்கள் கைவிடுவதற்கும் இப்படி நடக்கும் சொதப்பல்களுக்கும் அந்த நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்துள்ள பிரபலம் ஒருவரின் தலையீடும் குறைந்த சம்பளத்திற்கு நடிகர்களை ஒப்பந்தம் செய்வதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.