2017ஆம் ஆண்டு அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளிவந்த படம் விவேகம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வணிகரீதியாக லாபத்தை பெற்று கொடுத்தது.130 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 150 கோடிகள் வரை வசூல் சாதனை செய்தது. அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
வித்தியாசமான முயற்சியாக இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் புகழ் விவேக் ஓபராவை கமிட் செய்திருந்தார். சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு இந்த படம் பெயர் வாங்கித் தரவில்லை. எல்லாத்துக்கும் காரணம் இந்த படத்தின் வசனங்கள் தான்.
விவேகம் படத்தில் டெரர் வில்லனாக காட்டப்பட்ட விவேக் ஓபராய் அந்த படத்தில் அஜித்தை புகழ்ந்து மட்டுமே பேசுவார். எந்த காட்சிகளில் அதில் தோன்றினாலும் அவரை வலிமை மிக்க ஒரு கதாபாத்திரமாக வசனம் பேசி ரசிகர்களை எரிச்சலடைய செய்தார்.
அஜித்தை பங்கம் பண்ண ஆதிக் செய்த ஏற்பாடு
விவேகம் படத்திற்கு வசனம் எழுதியது யார் என்று தெரியவில்லை. ஒரு வில்லன், ஹீரோவின் புகழை மட்டும் தான் பாடிக் கொண்டே இருப்பார். அதேபோல் இப்பொழுது குட் பேட் அக்லி படத்திற்கும் அஜித்தை புகழ்ந்து பாடி நிறைய வசனங்களை எழுதி உள்ளார்களாம். இப்பொழுது இதுதான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் இருந்து வருகிறது.
குட் பேட் அக்லி படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார். அஜித்தை புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பாராம். இவருக்கு இந்த படத்தில் இதுதான் முக்கியமான கதாபாத்திரமாம். இதனால் விவேகம் படம் விவேக் ஓபராய் கதாபாத்திரம் தான் இந்த படத்திலும் சுனிலுக்கு என பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். அஜித் பட புரமோஷன்களுக்கு வர மாட்டார் என சுனிலை வைத்து ஸ்கெட்ச் போடுகிறது ஆதிக் ரவிச்சந்திரன் டீம்.
- அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு கொட்டிய வியாபாரம்
- அஜித் சம்பளத்தில் கை வைக்கும் லைக்கா
- உறுதியான குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி