Biggboss 8: விஜய் டிவியில் எத்தனை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதனாலேயே இது ஏழு சீசன்களை தாண்டி எட்டாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.
அதிலும் கமல் விலகிய நிலையில் விஜய் சேதுபதி வருவதும் புது மாற்றமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஏழாவது சீசனில் நடந்த குளறுபடிகளும் மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனமும் தான்.
அதனாலேயே விஜய் சேதுபதியின் வரவை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஆறாம் தேதி பிக்பாஸ் சீசன் 8 கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது.
இதில் விஜய் டிவியிலிருந்து பல நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் நாம் எதிர்பார்க்காத சில பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டுக்கு வருகின்றனர். அதனாலேயே இந்த சீசன் கன்டென்ட்டுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாகலமாக ஆரம்பமாகும் பிக்பாஸ் 8
இது ஒரு பக்கம் இருக்க இணையவாசிகள் ஏற்கனவே மூன்று மனைவிகளும் வந்துட்டு போயிட்டாங்க. இப்ப சந்தானமே இறங்கி வரப்போறாரு என விஜய் சேதுபதியின் என்ட்ரியை விக்ரம் படத்தோடு கனெக்ட் செய்து வருகின்றனர்.
லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த அந்த படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளாக ஷிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் மூவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் தான்.
இதுவும் இணையத்தில் ஜாலியாக கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி விஜய் சேதுபதி நிச்சயம் இந்த நிகழ்ச்சியில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதில் முக்கியமானது கமலுடன் ஒப்பிட்டு பார்த்து வரும் விமர்சனம் தான்.
அதனால் அவர் இந்த நிகழ்ச்சிக்காக நிறைய ஆலோசனைகளை பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. எது எப்படியோ ஆண்டவரின் அந்த கம்பீரக் குரலை ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள். அதை விஜய் சேதுபதி ஈடு கட்டுவாரா என்பதை பார்ப்போம்.
ஆண்டவர் இடத்தில் கலக்குவாரா விஜய் சேதுபதி.?
- அது பொம்பள ரவுடியாச்சே சகல
- கமல் இல்லாத பிக்பாஸ் 8 எப்படி இருக்கும்.?
- கமலுடன் விஜய் சேதுபதியை ஒப்பிட முடியாது