சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தளபதி விஜய் பற்றி இதுவரை வெளிவராத தகவலை சொன்ன பிரபலம்.. இதென்ன புதுசா இருக்கு

தளபதி விஜய்யை பற்றி சினிமா இன்ஸ்ட்ரியில் உள்ள பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அதில்,இன்றைக்கு அவர் உச்சத்தில் இருப்பதற்குக் காரணம் அவரது குணாதிசயம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் யாரும் கூறாத சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

சினிமாவில் உச்ச நடிகராக உள்ள தளபதி விஜய்க்கு ரசிகர் வட்டம் பெரிது. அவருக்கு சிறியோர் முதல் பெரியோர் வரை பலரும் ஃபேன்ஸாக உள்ள நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபடவுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை சக நடிகர்கள் உள்ளிட்ட பலரும் வைத்துள்ளனர்.

தவெகவின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில், இரட்டைக் குதிரையில் சவாரி செய்வதைப் போல அரசியலிலும் அதேசமயம், அவரது கடைசிப் படமான விஜய்69 படத்திலும் தளபதி கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் பூஜை நேற்றுப் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.

சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கிங் எனச் சாதித்துக் காட்டிய விஜய்யின் நடனம், நடிப்பு, பாடும் திறமை இதெல்லாவற்றையும் பற்றி பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் அவருடன் நடித்தவரும் பிரபல சின்னத்திரை பிரபலம் ஸ்ரீகுமார் விஜய்யைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஸ்ரீகுமார் கூறியதாவது:

‘ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி நடிப்பில் தலைவா படம் உருவாகிக் கொண்டிருந்தது. அப்போது இப்படத்தின் இண்டர்வெல் பிளாக்கிற்கு டிரெட் சென்டரில் ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தது. அன்றைக்கு பார்த்து செம வெயில். கேரவன் கூட தூரத்தில் நின்றிருந்தது. ஆனால், தளபதி தன் குடையைத் தானே பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். மற்றவர்கள் அவருக்குக் குடை பிடிக்கக் கூடாது.

srikumar


தளபதி குடையுடன் வந்துவிட்டார். அவர் கேரவனுக்கு போனால்தான நாங்கள் போக முடியும். நான், காளி வெங்கட், மொட்டை நடராஜன் அண்ணா 3 பேருக்கும் ஒரு கேரவன். வெயில் வாட்டி வதைப்பதால், என்னால் நிற்க முடியவில்லை; ஹீரோ போக மாட்டிங்கிறாரே கேரவனுக்கு என்று அவர்கள் கூறினர். ஆனால் வாகனத்தின் டயர் அருகிலேயே உட்கார்ந்துவிட்டார். அவர் வெயிலில், மாணிட்டரில் உட்கார்ந்து இருந்து எழுந்து போகவேயில்லை. அது ரவுண்ட் டிராக் சீன். அவ்வளவு டெடிகேட்டேட்டாக தளபதி இருந்தார்.

ஒருவேளை சீரியல் ஆர்டிஸ்டாக இருந்தால், 40 முறை எழுந்து சென்றிருப்பார்கள். ஆனால் விஜய் அப்படி இல்லை. அதேபோல் சாப்பாட்டு வேளையில் சாப்பாட்டு கேரியரை அப்படியே அவர் முன்பு வைப்பார்கள். யாரும் அதை எடுத்துப் போடக் கூடாது. அவரே சாப்பாட்டு உள்ளிட்டவற்றை எடுத்து தன் தட்டில் போட்டுக் கொண்டு வைப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.

தளபதியின் உண்மையான குணாதிசயங்கள் பற்றி நடிகர் ஸ்ரீகுமார் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவில் ஒவ்வொருவரின் மனங்களையும் வென்ற தளபதி வரும் 2026 தேர்தலில் மக்களின் மனங்களையும் வெல்வார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News