ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்.. வெத்துவேட்டாக போகாமல் கெத்தாய் சுற்றும் தினேஷ்

சிந்து சமவெளியில் விடலை பருவ பையனாக நடித்து கேரியரை தொடங்கினார் ஹரிஷ் கல்யாண். அந்தப் படம் அடல்ட் கன்டென்ட் கதை என்பதால் அடுத்தடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கேள்விக்குறியானது. இருந்தாலும் வசீகர சாக்லேட் பாயாக பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு மீண்டும் சினிமாவில் தன் இடத்தை பிடித்தார்.

இவர் தமிழில் நடித்தது மொத்தம் 20 படங்கள்தான்.ஆனால் இப்பொழுது தான் இவருக்கு நல்ல நேரம் வொர்க் அவுட் ஆகியுள்ளது. .2010ஆம் ஆண்டே இவர் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த போதிலும் 14 வருட போராட்டத்திற்கு பின் தற்போது தான் இவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

20 படங்களில் இவர் நடித்த 2 படங்கள் மட்டும்தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு படங்கள் இவரது சினிமா கேரியரை தூக்கி நிறுத்தி உள்ளது. பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து இந்த இரண்டு படங்களும் இவருக்கு ஒரு நடிகனாய் திருப்புமுனை தந்துள்ளது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் நடித்து வெளிவந்த படம் லப்பர் பந்து. ஐந்து கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 27 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் இவர்கள் இருவரின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் இப்பொழுது எங்கேயோ போய் உள்ளது.

வெத்துவேட்டாக போகாமல் கெத்தாய் சுற்றும் தினேஷ்

லப்பர் பந்து படத்திற்கு 70 லட்சம் சம்பளம் வாங்கிய ஹரிஷ் கல்யாண் இப்பொழுது ஒரு கோடி என சம்பளத்தை உயர்த்திவிட்டார். இருந்தாலும் அடுத்தடுத்து இவர் வீட்டு வாசலில்புது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதற்கிடையில் லப்பர் பந்து படத்திற்கு ஆரம்பத்தில் வைத்த பெயர் ஜப்பான். அட்டகத்தி தினேஷ் போட்டிருக்கும் டீ சர்ட்டில் கூட ஜப்பான் என்ற பெயர்தான் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளது. பெயர் நன்றாக இருக்கிறது என பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மணன் அவர்களிடம் இருந்து வாங்கி கார்த்தி நடித்த படத்திற்கு ஜப்பான் என்று பெயர் வைத்து விட்டார்.

ஜப்பான் என்ற பெயரோடு அட்டகத்தி தினேஷ் இந்த படத்திற்காக பல நாட்கள் நடித்து கொடுத்திருக்கிறாராம். அந்த பெயரை மாற்றி மறுபடியும் கெத்து என எடுத்திருக்கிறார்கள். இப்பொழுது இந்த பெயரே அவருக்கு செட்டாகி விட்டது. மறுபடியும் தமிழ் சினிமாவில் கெத்தாக சுற்றி வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News