Home Tamil Movie News 9 மாதங்களில் 200 படங்கள் ரிலீஸ்.. சூப்பர் ஹிட் வெறும் 5 மட்டுமே.. விஜய் படம்...

9 மாதங்களில் 200 படங்கள் ரிலீஸ்.. சூப்பர் ஹிட் வெறும் 5 மட்டுமே.. விஜய் படம் இருக்குதா? இதோ லிஸ்ட்

Lubber Pandhu- Vazhai- Premalu
Lubber Pandhu- Vazhai- Premalu

தமிழ் சினிமாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகியுள்ளன. அதில், சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என பல வகையில் எடுத்துக் கொண்டாலும், இப்படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் தெரிவித்துள்ளார்.

200 படங்கள் ரிலீஸ்

சினிமாவில் பல படங்கள் இன்னும் பலவேறு பிரச்சனைகளால் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், தடைகளைத் தாண்டி பல படங்கள் தியேட்டரில் ரிலீசாவது சாதனைதான். அப்படி ரிலீஸாகும் படங்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் அவற்றில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 200 படங்கள் ரிலீசாகியுள்ளன. ஆனால் அவற்றில் எத்தனை நல்ல படங்கள் எத்தனை ஓகே படங்கள், எத்தனை ஆவ்ரேஜ் படங்கள் என்று தெரிந்துகொள்வதும் கூட இனி வரும் காலத்தில், பணத்தை முதலாகப் போட்டு படமெடுக்கும் இந்த சினிமாவில் நல்ல படங்களைக் கொடுப்பதற்கு வழிகாட்டுவதாக இருக்கும். அதன்படி, பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது;

சூப்பர் மூவிஸ் லிஸ்ட்

1.பிரேமலு: கிரிஷ் ஏடி இயக்கத்தில், நஸ்லன் கே கபூர், மமித்தா பைஜூ ஆகியோர் நடிப்பில் பகத் பாசில் தயாரிப்பில் பிப்ரவரியில் ரிலீசான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து அனைத்து தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அவை:

2.கருடன்: துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி, உன்னி முகுந்தன், சசிகுமார் நடிப்பில் உருவான இப்படம் ரூ.44 கோடி வசூலித்துள்ளது. மே மாதம் வெளியான இப்படம் விமர்சகர்களின் வரவேற்பை இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

3.மகாராஜா: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, அனுராக் காஸ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் மாதம் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்து, வரவேற்பை பெற்றது.

4.வாழை: இயக்குனர் மாரிசெல்வராஜின் ஆட்டோ பயோகிரஃபி வகையைச் சேர்ந்த இப்படத்தை அவரே இயக்கியிருந்தார். கலையரசன், நிகிலா விமர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரூ.40 கோடி வசூலித்து, விமர்சன ரீதியாகவும் பாராட்டுகள் பெற்றுள்ளது.

5.லப்பர் பந்து: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், தினேஷ் நடிப்பில் செப்டம்பரில் வெளியான இப்படம் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

OK வகையான படங்கள்

மெரி கிறிஸ்துமஸ், மிசன், வடக்குப்பட்டி ராமசாமி, லவ்வர், பைரி, தி கோட் லைஃப், ஜமா, அந்தகன், போகுமிடம் வெகுதூரமில்லை, சட்டம் என் கையில், மெய் அழகன் ஆகிய படங்கள் ஓகே வகையான படங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்ட் மிஸ் மூவிஸ்

இப்பட்டியலில், ஜே பேபி, இங்க நான் தான் கிங்கு, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் கடும் சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் இந்த ஆண்டு ரிலீஸான படங்களைப் பட்டியலிட்டு உள்ளதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், விஜயின் தி கோட் இடம்பெறவேயில்லை. எனவே நல்ல படங்களில் இன்னும் சிலவற்றை அவர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்பாக கொட்டுக்காளி, தி கோட் லைஃப், ஜே பேபி உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் அவற்றை ஏன் ஜஸ்ட் மிஸ் லிஸ்டில் அவர் வைத்துள்ளார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.