நெல்சனுக்கு கோலமாவு கோகிலா படத்தில் ஆரம்பித்த வெற்றி இன்று ஜெய்லர் வரை தொடர்கிறது சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி இன்று ஆலமரம் போல் இயக்குனராய் வளர்ந்து நிற்கிறார். டாக்டர், ஜெய்லர் என அடுத்தடுத்து கொடுத்த அதிரிபுதிரி ஹிட்டால் கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருக்கிறார்.
ரஜினிகாந்த் கூலி படத்தை முடித்த பிறகு, நெல்சன் அவரை வைத்து ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். முதல் பாகத்தில் விட்டதை இரண்டாம் பாகத்தில் சேர்த்து பிடிக்கலாம் என கதையை செமையாய் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ரஜினிகாந்த் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் இருவருக்கும் தனக்கு இருப்பது போல் முக்கியமான கதாபாத்திரம் வேண்டும் என்று கூறியிருக்கிறார். எப்படியும் இந்த படத்தில்ஆயிரம் கோடிகள் வசூல் அடிக்க வேண்டும் என நெல்சன் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
வேட்டைக்கு தயாரான நெல்சன்
இதற்கிடையில் இந்த படம் முடிந்தவுடன் ஜூனியர் என்டிஆர் ஐ வைத்து ஒரு படம் எடுக்க போகிறாராம். என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான தேவாரா படம் சரியாக போகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.
தேவாரா படத்திற்கு மியூசிக் போட்டவர் அனிருத். அங்கே என்டிஆர் இடம் நெல்சனை பற்றி கூறி இப்பொழுது இருவரையும் கூட்டணி போட பாலம் போட்டு விட்டார் அவரது நண்பரான அனிருத். வழக்கத்திற்கு மாறாக ஆக்சன் படம் இல்லாமல் முதல் முதலாக நெல்சன் பாணியில் டார்க் காமெடி படத்தில் நடிக்க போகிறார் என் டி ஆர்.
- நான் தான் நம்பர் ஒன் என நிரூபித்த அனிருத்
- விடாமுயற்சியில் அனிருத் செய்த சம்பவம்
- ஓவராக ஆட்டம் போட்ட அனிருத்துக்கு ஆப்பு வைத்த ஜிவி பிரகாஷ்