ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

விஜய் டிவியின் 11 வாரிசுகளை தத்து எடுத்த பிக் பாஸ்.. பிரியங்காவைப் போல் தொகுப்பாளராக அதிகாரம் பண்ணும் போட்டியாளர்

Vijay tv Bigg boss 8: நேற்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அவருடைய பாணியில் எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை பார்க்க ஒட்டுமொத்த மக்களும் ஆர்வமாக இருந்தார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி நேற்று பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை பார்த்து மக்கள் ஒவ்வொருவரும் இது இவருடைய தனித்துவத்தை காட்டும் விதமாக அட்டகாசமாக இருந்தது என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் சேதுபதி எதார்த்தமாக தொகுத்து வழங்கி ஒவ்வொருவருக்கும் சரியான பதிலடி கொடுத்து ஒரு தொகுப்பாளராகவும் பெஸ்ட் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் போன ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை நிறைவேற்றும் விதமாகவும் மக்களிடம் நற்பெயரை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.

மற்ற போட்டியாளர்களிடம் கருத்தை சொல்லி திணிக்கும் தொகுப்பாளர்

ஆனால் இந்த சீசன் போட்டியாளர்களை பார்க்கும் பொழுது புதுசாக இரண்டு மூன்று பேர் தான் வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் விஜய் டிவி சீரியல் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரிச்சயமான போட்டியாளர்கள் தான். அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, கோமாளி சுனிதா, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்த தீபக் மற்றும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்.

செல்லமா சீரியலில் நடித்த அன்சீதா, அர்னவ், ஈரமான ரோஜா சீரியலில் நடித்த பவித்ரா, விஜய் டிவி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின், பொன்னி சீரியலில் வில்லியாக நடித்த தர்ஷிகா, பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ரஞ்சித், விஷால், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் போன்ற போட்டியார்கள் அனைவரும் விஜய் டிவியில் பல வருடங்களாக குப்பை கொட்டினவர்கள் தான்.

அப்படிப்பட்ட இவர்களை தான் தற்போது தத்தெடுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். உள்ளே போன ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களுக்கு கொடுத்த டாஸ்க்க்கை சரிவர செய்யும் விதமாக கலந்து பேசிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தீபக், மற்றவர்களை அதிகாரம் பண்ணும் விதமாக முடிவு பண்ணி இவருடைய கருத்துக்களை திணித்து வருகிறார்.

எப்படி பிரியங்கா ஒரு தொகுப்பாளராக இருந்து கொண்டு எல்லார் விஷயத்திலும் மூக்கை நுழைத்தாரோ, அதுபோல கொஞ்சம் கொஞ்சமாக தீபக் தன்னுடைய அனுபவத்தை காட்டும் விதமாக தொகுப்பாளர் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரையும் ரூல் பண்ணி வருகிறார். இவருடைய பேச்சும் தோரணையும் நான் சொல்வதை நீங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் என்பதற்கு ஏற்ப அடிபணிய வைக்கிறது.

அந்த வகையில் ஒட்டுமொத்த ஆண்களையும் ஒரு வாரம் நீங்கள் யாரும் நாமினேசன் பண்ணக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இது ரூல் படி சரியாக இருந்தாலும் அது எந்த வாரமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு பண்ணுவோம் என்பதற்கு ஏற்ப தீர்மானமாக இருக்கிறார். இதே மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் இவருடைய கருத்தை சொல்லும் விதமாக முதல் ஆளாக குரல் கொடுத்து அதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக நடந்து கொள்கிறார்.

அதே மாதிரி இப்பொழுது வரை தீபக் என்ன சொல்கிறாரோ அதை தான் மற்றவர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் இவருக்கு இருக்கும் ரசிகர்களை வைத்து பிரியங்காவை போல டாப் ஃபைனலிஸ்டாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Trending News