சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

உலக சாதனை புத்தகத்தில் அஜித்.. வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்.. அப்படி என்ன சாதனை தெரியுமா?

அஜித்குமாரின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத வகையில், ஹார்லி டேவிட்சன் பைக் ரைட் ஏற்பாடு செய்ததற்காக உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அஜித்குமார் தற்போது குட்பேட் அக்லி என்ற படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சினிமாவைத் தாண்டி, துப்பாக்கிச் சுடுதல் வீரர், ட்ரோம் வடிவமைத்தல், கார் ரேஸ், பைக் ரேஸ், பைக் பயணம் ஆகியவற்றில் ஈடுபட்டு கொண்டு பன்முகக் கலைஞராக வலம் வருகிறார்.

அஜித்குமார் பைக் பயணத்தில் தான் பெற்ற அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்று நினைத்து அவர் வீனஸ் மோட்டார்ஸ் என்ற டூர் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி, அஜித் எப்படி பைக்கில் உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாரோ அதேபோல், பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், பல உதவிகளும் இந்த வீனஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒருவருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட வீனஸ் மோட்டார்ஸ் குறுகிய காலத்தில் பைக் ரைடர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே இந்தியாவை தாண்டி, போச்ச்சுக்கல், வியட்நாம், தாய்லாந்து, அரேபிய நாடுகளான துபாய், ஓமன், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பைக் பயணத்தை தேர்ந்து திட்டமிட்டு நடத்தியது. இதில், பைக் மட்டுமன்று கார் பயணத்திற்கும் வழிகாட்டும் வகையில் உள்ளதால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அந்தமான் ரம்பிள் தீவில், நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹார்லி டேவிட்சன் ரைடு மூலம் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதன்படி, இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி டேவிட்சன் மோட்டார் ரைட் ஏற்பாடு செய்ததற்ஆக மதிப்புமிக்க உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாகத் தகவல் வெளியாகிறது.

அஜித் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக ஹேட்டர்ஸ் அவர் மீது விமர்சனங்களை சுமத்தி வந்த நிலையில், சினிமாவில் கால்ஷீட் பிசகாமல் நடித்துக் கொடுப்பது மட்டுமின்றி, அஜித் மோட்டார் டூர் மற்றும் கார், பைக் ரேசிலும் கவனம் செலுத்தி வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் அந்தமானின் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைக்காக அஜித்திற்கும் அவரது நிறுவனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நடிகர் அஜித் இரண்டு வாரங்களுக்கு முன்புதான், தனது தொழில்முறை கார் ரேஸிங் டீமை அறிமுகம் செய்து, அவரும் கார் ரேஸிங் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த டீமும் வரும் ரேஸில் கோப்பை வென்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News