ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அம்பானியின் அட்டிலா வீடு.. கடைசி தளத்தில் வசிக்க இப்படி ஒரு காரணமா!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் அட்டிலா வீட்டில் அவரது குடுபத்தின் ஏன் கடைசி மாடியில் தங்கியுள்ளனர் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இந்தியாவில் பல்வேறு தொழில்துறைகளில் கால்பதித்து நாட்டின் முன்னணி தொழிலபதிபராக திகழும் முகேஷ் அம்பானி போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட 2023 ஆம் ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தார். இந்த ஆண்டு இந்தியா மற்றும் ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 12 வது இடத்தில் இருக்கிறார்.

முகேஷ் அம்பானி உலகின் பல பகுதிகளில் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளார். அதில் இந்தியாவின் மும்பையில் உள்ள அட்டிலா வீடு, லண்டனில் ஸ்டோக்ஸ் பூங்காவில் வீடு, துபாயில் சமீபத்தில் பாம் ஜூமேராவில் வாங்கிய விலையுயர்ந்த வீடு உள்ளிட்டவற்றுடன், உலகின் பிரசித்தி பெற்ற ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், பிஎம்டபள்யூ என 200க்கும் அதிகமான சொகுசு கார்களும் வைத்துள்ளார்.

இந்த நிலையில், ஆடம்பரத்திற்கும் சொகுசுக்கும் பெயர் போன அம்பானியின் அட்டிலா வீடு மிகவும் விலை உயர்ந்ததாகும். உலகின் மதிப்புமிக்க வீடுகளிலும் சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் பிரதான அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள ஆண்டிலியா வீடு 4,00,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட பிரமாண்ட வீடு ஆகும்.

இந்த வீட்டின் மதிப்பு 923 பில்லியன் டாலர்கள், ரூ.15000 கோடிகள் என்று மதிப்பிடப்படும் நிலையில், உலகின் விலை உயர்ந்த வீடாக மதிக்கப்படுகிறது. இந்த வீட்டில் மொத்தம் 27 மாடிகளைக் கொண்டிருந்தாலும் சாதாரண வீட்டின் உயரத்தைப் போல் இதன் உயரம் இருக்காது.

அதைவிட 2 அல்லது 3 மடங்கு உயரத்தில் ஒவ்வொரு தளமும் கட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீட்டின் கட்டுமானம் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்து, கடந்த 2010 ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. ஆனால், 2011 ஆம் ஆண்டுதான் முகேஷ் அம்பானி குடும்பம் இவ்வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

இந்த ஆடம்பர வீட்டை வடிவமைத்தது, அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த பெர்கின்ஸ் & வில், ஹிர்ஷ் பெட்னர் அசோசியேட்ஸ். இந்த வீட்டிற்கு ஆன்டிலியாவின் பாண்டம் தீவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதில், 6 மாடிகளில் கார் பார்க்கிங் வசதிகள் உள்ளன. அதுபோக, மொட்டை மாடியில் 3 ஹெலிபேடுகள், நவீன வசதிகளுடன் கூடிய தியேட்டர், தொங்கும் தோட்டம், ஐஸ்கிரீம் பார்லர், பனி அறை, நீச்சல் குளம் உள்ளிட்ட சகல வசதிகளும் இந்த வீட்டிற்குள் உள்ளன.

27 மாடிகள் கொண்ட இந்த வீடு, 568 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. 9 உயர்தர லிஃப்டுகள் உள்ளன. இந்த வீடு ரிக்டர் அளவுகோலில் 8 அளவுக்கு நில நடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இப்படி சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு அதிகளவு வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மாளிகையின் 27 வது மாடியில்தான் முகேஷ் அம்பானி, அவாது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.

27 மாடிகளைக் கொண்டிருக்கும் இந்த வீட்டின் 27 வது மாடியை ஏன் இவர்கள் தேர்வு செய்தார்கள் என்றால், இங்கு நல்ல காற்றோட்ட வசதி, சூரிய ஒளி வரும் வகையில் உள்ளதால் இதை அவர்கள் தேர்வு செய்ததாக தெரிகிறது. அதிலும் இம்முடிவை நீதா அம்பானிதான் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், மற்ற 26 மாடிகளிலும், கார் பார்கிங், 600 தொழிலாளர்கள் தங்குவதற்காக பல்வேறு அறைகள், விளையாட்டு, நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும் நிலையில் 27 வது மாடியை பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகி இருக்கவும் குடும்பத்தின் பிரைவசி காரணமாக அவர்கள் கடைசி மாடியில் வசித்து வருவதாகவும், இங்கு குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News