சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அமெரிக்கால கூப்ட்டாகோ, ஜப்பான்ல கூப்ட்டாகோ, நம்பி ஏமாந்த விஜய்.. தளபதி 69தை கவிழ்த்திய தயாரிப்பாளர்

தளபதி 69 பட சூட்டிங் சென்னை அருகே உள்ள பயனுூரில் நடந்து வருகிறது. ஆரம்பித்திலேயே பிரம்மாண்ட செட் போட்டு பல கோடிகளை இறக்கி பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றார்கள். இந்த பாடலை விஜய் தான் பாடுகிறாராம். இந்த பாடலுக்கு டைட்டில் “ஒன் லாஸ்ட் சாங்” என வைத்திருக்கிறார்கள்.

விஜய் பாடக்கூடிய மற்றும் நடிக்கக்கூடிய கடைசி படம் இதுதான். அதனால் தான் இந்த பாடலுக்கு இப்படி ஒரு டைட்டில். இந்த பாடலில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். லியோ வாரிசு போல் ஒரு பெரிய கூட்டத்தைக் கொண்டு உருவாகி வருகிறது இந்த பாடல்.

தளபதி 69 படத்தை தயாரிப்பது கே வி என் ப்ரொடெக்ஷன் நிறுவனம். டாக்சிக், டெவில் என கன்னட படங்களை தயாரித்து வருகிறது. தளபதி 69 தான் இவர்களுக்கு தமிழில் களமிறங்கும் முதல் படம். இவர்கள் பிரஸ்டீஜ் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட குழுவாம்.

கேவிஎன் நிறுவனத்திடம் 1000 கோடிகள், 2000 கோடிகள் இருக்கிறது, இவர்கள் மிகப்பெரிய பின்புலம் கொண்ட தயாரிப்பு நிறுவனம். தளபதி 69 படத்தை ஒரு பிரம்மாண்ட படமாக உருவாக்க போகிறார்கள் என்றெல்லாம் கலர் கலராக அவிழ்த்து விட்டனர்.

தளபதி 69தை கவிழ்த்திய தயாரிப்பாளர்

லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்டில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் “பென்ஸ்” என்ற படத்தை இந்த நிறுவனம்தான் தயாரிக்கிறது. இதையெல்லாம் நம்பி தான் விஜய், இவர்களுடன் படம் பண்ண சம்மதம் தெரிவித்தார். ஆனால் இப்பொழுது இவர்கள் மதுரை அன்புச்செழியன் இடம்பைனான்ஸ் வாங்கித்தான் தளபதி 69 படத்தையே எடுக்கிறார்களாம்.

Trending News