தனுஷ் ஏகப்பட்ட வேலைகளை வைத்துக்கொண்டு நிக்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இப்படித்தான் இரண்டு வருடங்கள் மிக பிஸியாக இருந்து வருகிறார். நடிப்பதையும் தாண்டி இயக்குவதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தில் நடித்தும் இயக்கியும் வருகிறார்.
தேனியில் நடைபெற்று வந்த இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் வேலைகளை முடித்துவிட்டு, இப்பொழுது அவர் ஏற்கனவே இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு வந்து விட்டார். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சி மீதம் இருப்பதை ஒட்டி இங்கே வந்து விட்டார்.
இந்த படத்தை முடித்துவிட்டு நாகார்ஜுனாவுடன்நடித்துக் கொண்டிருக்கும் சேகர் கம்லாவின் குபேரா படத்திற்கு செல்கிறார். இப்படி கடும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஒரு ஹிந்தி படம் வேறு கமிட் செய்து வைத்திருக்கிறார். குறைந்தது ஒரு வருடங்களாவது தனுஷின் கேரியர் இப்படி ஓடிவிடும் என்கிறார்கள்.
டைரக்ட் செய்வதால் இசைஞானிக்கு இல்லாத மதிப்பு
இதற்கிடையில் தனுஷ் கமிட் செய்து வைத்திருந்த இளையராஜா பயோ பிக் படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அந்த படத்தை இந்த ஆண்டு இறுதி டிசம்பர் மாதத்தில் இருந்து சூட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை.
தனுஷ் இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா உடன் கொஞ்ச நாட்களாவது டிராவல்ஸ் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். அப்பொழுதுதான் இந்த படத்தில் தத்துரூபமாக நடிக்க முடியும் என கூறி வந்தார். இதற்கிடையில் இளையராஜா போல் ஆர்மோனிய பெட்டி வாசிப்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
- Raayan : அடங்காத அசுரனாக மிரட்டும் தனுஷ்
- ஓடிடியில் மொக்கை வாங்கிய ராயன்
- ராயனால் மாறன் இப்போ ஹேப்பி அண்ணாச்சி