ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

கவாஸ்கருக்கு கம்பீர் மீது என்ன கோபமோ தெரியல.? பல வருட பகைய கொட்டிய லிட்டில் மாஸ்டர்

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற பின் இந்திய அணியின் வெற்றி சராசரி 99 சதவீதமாக மாறி உள்ளது. 20 ஓவர் போட்டிகளில் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையிலும் இந்திய அணியின் வெற்றி சராசரி இப்படி இருப்பது பெருமைக்குரியதுதான்.

 இந்திய அணிக்கு 2027 வரை கௌதம் கம்பீர் தான் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இயல்பாகவே கம்பீர் கொஞ்சம் கோபக்கார மனிதர. இவரின் ஆக்ரோஷமான குணத்திற்கு முன்னாள் வீரர்கள் பல பேர் இவர் மீது அதிருப்தியை காட்டியுள்ளனர்.  குறிப்பாக இப்பொழுது சுனில் கவாஸ்கர் கௌதம் கம்பீரை விளாசி வருகிறார்.

பல வருடத்து பகைய கொட்டிய லிட்டில் மாஸ்டர்

 இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மா தான் காரணம். அவரின் அதிரடி ஆட்டமும் நல்ல தொடக்கமும் தான் இந்திய அணியின் வெற்றி சதவீதத்தை உயர்த்தி வருகிறது. இவரால் மற்ற  வீரர்களுக்கு அழுத்தம் குறைகிறது, அதனால் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதை விட்டுவிட்டு கம்பீரை புகழ்வது நியாயம் இல்லை என கவாஸ்கர் கூறி வருகிறார்.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் கம்பீரின் ஆக்ரோஷம் கவாஸ்கருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்பொழுதே இருவரும் மாறி மாறி சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டனர். இப்பொழுதும் கம்பீரை புகழ்வது சுனில் கவாஸ்கருக்கு பிடிக்கவில்லை. இதனால் ரோஹித் சர்மாவை உயர்த்தி கம்பீரை மட்டம் தட்டி பேசி வருகிறார் கவாஸ்கர்.

ராகுல் டிராவிட் பதவி காலம் முடிந்த பிறகு 2024 ஜூலை மாதத்தில் இருந்து கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அதிலிருந்து இந்திய அணியின் செயல்பாடுகள் அபாரமாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் என அடுத்தடுத்து தொடர்களை வென்று  சாதித்துள்ளது இந்தியா, 

- Advertisement -spot_img

Trending News