சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நெப்போலியனின் மகன் திருமணம் குறித்து வந்த விமர்சனம்.. சரியான பதிலடி கொடுத்த தனுஷ்

Nepoleon: நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற இருக்கிறது. நெப்போலியன் மூத்த மகனான தனுஷுக்கு சதை தசைவு நோய் உள்ளதால் அவரால் நடக்க முடியாது. 25 வயதாகும் அவர் தனது தந்தையின் ஐடி நிறுவனத்தை கவனித்து வருகிறார்.

தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நெப்போலியன் திருநெல்வேலி சேர்ந்த நர்ஸ் பட்டதாரி பெண் ஒருவரை தனுஷுக்கு திருமணம் செய்து முடிக்க உள்ளார். கடந்த சில மாதங்கள் முன் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் தனுஷ் கலந்து கொள்ள முடியாததால் வீடியோ காலில் பங்கு பெற்றார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. இதை அடுத்து நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார், பணத்திற்கு ஆசைப்பட்டு அந்தப் பெண் தனுஷை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பல நெகடிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது.

நெப்போலியனின் மகன் தனது திருமணம் குறித்து பேசிய விஷயம்

இந்த சூழலில் இதுவரை மௌனம் காத்து வந்த தனுஷ் இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதாவது தன்னுடைய திருமண செய்தி கேட்டு நிறைய வாழ்த்துக்கள் வந்தது. என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு சில நெகட்டிவ் விமர்சனங்களும் என்னுடைய திருமணம் குறித்து வந்தது.

அதுவும் தனக்கு மிகவும் உத்வேகத்தை தான் கொடுத்து இருக்கிறது. என்னால் எல்லாமே செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டுகிறேன். இதன்மூலம் என்னை போன்ற உள்ளவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என பலர் சொல்லுவார்கள்.

அதையெல்லாம் காதில் வாங்காமல் நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக உங்களால் முடியும். மேலும் தன்னுடைய திருமணம் குறித்து தவறாக பேசியவர் வாயடைக்கும்படி நடந்து கொள்வேன் என்று தனுஷ் கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

Trending News