வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஃபேவரிட் மருமகளாக சீரியலில் கலக்கும் விஜய் டிவியின் 4 கதாநாயகிகள்.. சீறிப்பாயும் சிங்கப்பெண்கள்

Vijay Tv Serial: சீரியலை பொருத்தவரை சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவி மக்களின் ஃபேவரைட் சேனலாக இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து வருகிறது. அதனால் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதலிடம் என்றால் விஜய் டிவி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அந்த வகையில் எத்தனையோ சீரியல்கள் விஜய் டிவியில் இருந்தாலும் சில சீரியலுக்கு மட்டும் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதற்கு காரணம் அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்களை கவர்ந்ததால் அவர்களுக்காகவே அந்த நாடகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி விஜய் டிவி சீரியலில் கலக்கும் நான்கு மருமகள் தற்போது ஃபேவரைட் மருமகளாக இடம் பிடித்திருக்கிறார்கள்.

மக்களை கவர்ந்த மருமகள்கள்

அதில் சிறகடிக்கும் ஆசை சீரியலில் மீனா, ரோகிணி மற்றும் ஸ்ருதி என்று மூன்று மருமகள் விஜயாவுக்கு இருந்தாலும் அதிரடியாகவும் ஆர்ப்பாட்டம் ஆகவும் ஸ்ருதி எடுக்கும் முடிவு பலரையும் கவர்ந்திருக்கிறது. முக்கியமாக மாமியார் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று விஜயா நினைக்கும் ஆணவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்ருதியின் செயல்கள் அனைத்தும் கைத்தட்டல்களை பெற்று வருகிறது.

விஜயா எந்த அளவிற்கு மீனாவை அலட்சியப்படுத்துகிறாரோ அதே மாதிரி ஸ்ருதி, மாமியார் என்றால் நீங்கள் ஒரு ஓரமாகத்தான் இருக்க வேண்டும். எங்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று மாமியாருக்கு ஒரு வரையறை போட்டு அதிலேயே வைத்து வருகிறார். இதனால் இவருடைய நடிப்பும் கதாபாத்திரமும் மக்களை கவர்ந்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில், ராஜி, மீனா என்று மூன்று மருமகள் கோமதிக்கு இருந்தாலும் இதில் மீனாவின் நடிப்பும் கதாபாத்திரமும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த குடும்பத்தை பற்றியும் மாமனாரை பற்றியும் தெரிந்து எங்கே பேசினால் என்ன காரியம் நடக்கும் என்பதை புரிந்து கொண்டு உஷாரான மருமகளாக அந்த குடும்பத்தை கண்ட்ரோலில் வைத்து வருகிறார்.

அந்த வகையில் மீனா மற்றும் கோமதி காம்போ அடி தூள் என்று சொல்லும் அளவிற்கு அட்டகாசமாக அமைந்து வருகிறது. அடுத்ததாக ஆகா கல்யாணம் சீரியலில் ஐஸ்வர்யா, மகா, அனாமிகா என மூன்று மருமகள் இருந்தாலும் தனக்கு தேவையான விஷயத்தை அதிரடியாக நடத்தி எந்தவித கெடுதலும் நடக்காத அளவிற்கு ஐஸ்வர்யா எடுக்கும் முடிவு அனைத்துமே ரசிக்கும் படியாக அமைந்து வருகிறது. வீட்டிற்கு இப்படி ஒரு மருமகள் இருந்தால் பிரச்சனையே இல்லை என்பதற்கு ஏற்ப இவருடைய கதாபாத்திரம் கவர்ந்து வருகிறது.

அடுத்ததாக வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் பல்லவி, பவித்ரா மற்றும் அஞ்சலி என மூன்று மருமகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் வித்தியாசமான கேரக்டரில் இருக்கிறார்கள். அதில் பவித்ரா ரொம்பவே நல்லவராகவும், குடும்பத்திற்காக எல்லா தியாகத்தையும் செய்யக்கூடிய அளவிற்கு பொறுமையாக இருந்து வருகிறார். பல்லவி இதற்கு எதிர்மறையாக அந்த குடும்பத்திற்கு கெடுதல் நினைக்கும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவர்கள் இருவருடைய நடிப்பையும் தூக்கி சாப்பிடும் விதமாக அஞ்சலியின் கதாபாத்திரம் எதார்த்தமாகவும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசக்கூடிய அளவிற்கு மிகவும் துல்லியமாக இருக்கிறது. அதனால் அஞ்சலியின் மருமகள் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டது. இப்படி சீரியல் மூலம் இந்த நான்கு மருமகளும் மக்களிடம் அவர்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு ஃபேவரிட் மருமகள் என்ற இடத்தை பிடித்து விட்டார்கள்.

Trending News