பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர். படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் இவரும், ராம் சரணும் சேர்ந்து நடனமாடிய நாட்டுக்குத்து பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கொடுக்கப்பட்டது. இந்த புகழ் இருக்கும்போதே, பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று நினைத்த NTR தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கமிட் ஆன படம் தான் தேவரா.
என்.டி.ராமாராவின் பேரன்தான் இந்த ஜூனியர் என்.டி.ஆர். அவரது குடும்பத்தில் பலரும் சினிமாவில் இருந்ததால் இவருக்கும் நடிகராக வேண்டும் என்கிற ஆசை வந்தது. துவக்கத்தில் மிகவும் குண்டாக இருந்தார். அதன்பின் படிப்படியாக உடல் எடையை குறைத்தார். ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிப்பார்.
தேவரா படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை தான் இவர் வெளிப்படுத்தினார். இருப்பினும் படம் 100 சதவீத வெற்றி என்று கூற முடியாது. இந்த நிலையில், படம் வெற்றி பெறாமல் போனதற்கு தன்னுடைய வருத்தத்தை கூட வெளிப்படுத்தி இருந்தார்.
“இப்போதெல்லாம் படத்தை யாரும் பொழுதுபோக்காக பார்ப்பதில்லை. தேவை இல்லாமல் ஆராய்ச்சி செய்கின்றனர். விமர்சனம் செய்கின்றோம் என்ற பெயரில், படத்தில் இருக்கும் குறைகளை மட்டும் பூதக்கண்ணாடி போட்டு வெளிப்படுத்தி, மக்களை பார்க்க வைக்கின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது. ” என்று குறிப்பிட்டு இருந்தார்.
கன்டென்ட் ல Focus பண்ணுங்க ப்ரோ..
இதை தொடர்ந்து, இவரது ரசிகர்களை, “நீங்கள் நன்றாக தான் நடித்துள்ளீர்கள். ஆனால் கதையை கேட்க்கும்போது, கவனமாக இருங்கள். படம் தோல்வி அடைய காரணம் கதை இல்லாமை தானே தவிர நீங்கள் இல்லை.. ” என்று ஆறுதல் படுத்தி வருகின்றனர்.
நேர்காணல் ஒன்றில் தேவரா படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா கூறியதாவது, ” தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் யாரையும் நடிக்க வைக்க திட்டமில்லை. மாறாக, சில முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது.
“தேவாராவின் உலகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால் நன்றாக இருக்கும். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இரண்டாம் பாகத்தின் 20 நாள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, நெட்டிசன்கள், “யாரை நடிக்க வைத்தாலும், கதை முக்கியம். முதலில் கன்டென்ட் ல focus பண்ணுங்க ப்ரோ..” என்று கூறி வருகின்றனர்.