திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

சீரியலை விட டிஆர்பி ரேட்டிங்கில் மோசமாக அடி வாங்கிய பிக் பாஸ்.. தோற்றுப்போன விஜய் டிவியின் குருநாதர்

Vijay Tv: மக்களின் பொழுதுபோக்காக சின்னத்திரை மூலம் பல சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் முக்கால்வாசி மக்கள் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ள சீரியல்களுக்கு மட்டும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங் இன் படி சன் டிவி எப்பொழுதுமே முதலிடமும் இரண்டாவது இடத்தில் விஜய் டிவியும் இருக்கிறது.

இருந்தாலும் விஜய் டிவி சன் டிவிக்கு ஈடாக முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு பல சீரியல்களை கொண்டு வருகிறது. ஆனாலும் சன் டிவி பக்கத்தில் கூட போக முடியவில்லை. இதனால் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் மக்களை மகிழ்விக்கும் காமெடி நிகழ்ச்சிகள் போன்று பல வித்தியாசமான முறையில் கொண்டு வந்தார்கள்.

அந்த வகையில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் ஃபேவரிட் ஆக இடம் பிடித்திருக்கிறது. ஆனால் இந்த முறை ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் 12க்கும் மேற்பட்டவர் விஜய் டிவி சீரியலில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தான். அதனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மியாக தான் இருக்கிறது.

அதிலும் சீரியலில் நடித்த நடிகைகள் உள்ளேயும் போய் நடிப்பை தான் வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில் அழுகாட்சி சீன்தான் நடக்கிறது என்பதற்கு ஏற்ப தினமும் மாத்தி மாத்தி ஒவ்வொரு போட்டியாளர்களும் அழுது கொண்டு பார்ப்பவர்களுக்கு ரொம்பவே போர் ஏற்படுத்தும் விதமாக மொக்கையாக போய்க் கொண்டிருக்கிறது.

அதனால் இந்த பிக் பாஸை பார்ப்பதற்கு பதிலாக சீரியலை பார்த்து விடலாம் என்று மக்கள் வெறுத்துப் போய் விட்டார்கள். அந்த வகையில் கடந்த வாரம் விஜய் சேதுபதி வந்து தொகுத்து வழங்கியதில் டிஆர்பி ரேட்டிங்கில் 5.72 புள்ளிகளை பெற்றிருக்கிறது. வாரத்தில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீரியல் விட மோசமான புள்ளிகளை பெரும் அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் 4.27 புள்ளிகளை தான் பெற்றிருக்கிறது.

இதனால் எப்படியாவது டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்று பிக் பாஸ் குருநாதர் ஒவ்வொரு டாஸ்க்குகளையும் சண்டைகளையும் மூட்டி விட்டு மோத விடுகிறார். ஆனாலும் போட்டியாளர்களிடம் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப உப்புசப்பு இல்லாமல் ஒவ்வொரு நாளும் சுவாரசியமே இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்த போட்டியாளர்களிடம் பிக் பாஸ் இன் குருநாதர் தோற்றுப் போய்விட்டார் என்று சொல்வதற்கு ஏற்ப இந்த சீசன் கொஞ்சம் சொதப்பலாக அமைந்து வருகிறது.

- Advertisement -spot_img

Trending News