பாகுபலி 3 வருமா? வராதா? கடைசியா இதுக்கு ஒரு முடிவு வந்துச்சி

பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி 1 பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றது முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் வட இந்தியாவிலும் பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது.

ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த வந்த RRR படமும் அதே போல பெரிய வெற்றியைப் பெற்றது அதில் நடித்த ராம் சரண், ஜூனியர் என்டிஆர் பான் இந்தியா பிரபலமாகினார். ‘பாகுபலி 2 படம் வெளிவந்த பின்பே ‘பாகுபலி 3 பற்றிய பேச்சுக்களும் எழுந்தது. ஆனால், அது எப்போது உருவாகும் என்பது குறித்த எந்த தகவலும் வரவில்லை.

இந்த நிலையில் ராஜ மவுலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் ஒன்று எடுக்கவிருக்கிறார். அந்த படம் ஒரு பிரம்மாண்ட வரலாற்று படமாக இருக்குமா என்ற கேள்வியும் வந்துள்ளது.

பாகுபலி 3 வருமா?

பாகுபலி க்கு பிறகு எத்தனை படங்கள் வந்தாலும், பிரபாஸ்-க்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிட்டவில்லை என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கு, பாகுபலி 3 வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் பாகுபலி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் பாகுபலி 3 வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் கூறிய பதில் பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பாகுபலி 3 100 சதவீதம் வர வாய்ப்புள்ளது என்று தான் நினைக்கிறேன்.

ஏன் என்றால் அந்த படத்தை பற்றி திட்டமிட்டு வருகிறார்கள். மேலும் எல்லா தரப்பினரின் விருப்ப படமாகவும் உள்ளது. அதனால் கண்டிப்பாக வர வாய்ப்புள்ளது என்று தான் நானும் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment