வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

40 வருட சினிமா வாழ்க்கையில் உச்சகட்ட விரக்தியில் மணிரத்தினம்.. கண்டுகொள்ளாத பெரும் தலைகள்

மணிரத்தினம் 1983இல் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார்.பல்லவி அணு பல்லவி என்னும் கன்னட படத்தையும் அதன் பின் உணரூ என்ற மலையாளப் படத்தை இயக்கினார்.1985ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் காலடி பதித்தார். இன்று அவருக்கு சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடம் அனுபவம் கிடைத்துள்ளது.

தமிழில் இவர் இயக்கிய முதல் படம் பகல் நிலவு. அந்த படத்திற்கு பின்னர் மணிரத்தினத்தின் சினிமா கேரியர் உயரப் பறந்தது. கிட்டத்தட்ட 10 வருட காலம் எந்த ஒரு இறங்கு முகத்தையும் அவர் சந்திக்கவில்லை. இதய கோயில், மௌன ராகம், அக்னி நட்சத்திரம் என சூப்பர் ஹிட் படங்களால் கொடிகட்டி பறந்தார்.

இன்றுவரை இவர் இயக்கத்தில் நாம் நடித்து விட மாட்டோமா என எங்கும் ஹீரோக்கள் பல பேர் இருக்கின்றனர். ரஜினிக்கு ஒரு தளபதி, கமலுக்கு ஒரு நாயகன் என அவர்கள் கேரியர் பெஸ்ட் படங்களை கொடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்தவர் மணிரத்தினம்.

இப்பொழுதும் கூட கமலை வைத்து தக்லைப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ளது. கமல் மற்றும் சிம்பு இதில் நடித்து வருகின்றார்கள். இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக மணிரத்தினம் உச்சகட்ட வெறுப்பிலிருந்து வருகிறார். பெரிய நடிகர்களாகிய கமல். ரஜினிகாந்த் என யாரும் அவரை கண்டு கொள்ளவே இல்லை.

2022ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். அவரின் கனவு படமான இதை பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்கி சாதித்து காட்டினார். இந்த படம் நான்கு தேசிய விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த இசை, மாநில திரைப்படம் என இந்த படத்துக்கு விருதை வழங்கினர். ஆனால் இவ்வளவு சாதித்தும் அவருக்கு தமிழ் திரை உலகிலிருந்து யாரும் ஒப்புக்கு கூட யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News