வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

லியோ படம் ஹிட்டுனா விஜய் தன் கல்யாண மண்டபத்தை ஏன் விற்கனும்? பிரபல சினிமா விமர்சகர் கேள்வி!

விஜயின் லியோ படம் வெளியாகி ஓராண்டாகி உள்ள நிலையில் பிரபல சினிமா விமர்சகர்கள் லியோ படம் தோல்வி என்று கூறி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்- லோகேஷ் 2 வது முறை கூட்டணி

மாஸ்டர் பட வெற்றிக்குப் பின் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்த படம் லியோ. இப்படம் இதுவரை விஜய் படத்திற்கு இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து, ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் ஆச்சர்யபட வைத்தது. விஜயுடன் இணைந்து இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் இப்படத்தை லலித்குமார் பிரமாண்டமாக தயாரித்திருந்தார்.

ரூ.300 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை, ‘பார்த்திபனாக வரு விஜய், காஷ்மீரில் காஃபி ஷாப் ஓனராக இருக்கும் நிலையில் தன் மனைவி சத்யா ( த்ரிஷா) இரண்டு குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். அப்போது ஒரு வீட்டில் திருவிவிட்டு அந்த காஃபி ஷாப்புக்கு வரும் மிஷ்கின், சாண்டி மாஸ்டர் கும்பல் விஜயுடன் தகராறு செய்கிறது.

அப்போது விஜயின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகிறது. அவர் பிரபலமாகிறார். பார்த்திபன் புகைப்படத்தைப் பார்த்த அவரது அப்பா சஞ்சய்த் தத், அர்ஜூன் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்து, விஜய் உயிருடன் இருப்பதாக அறிந்து காஷ்மீர் விரைகின்றனர். தன் அப்பா, சித்தாப்பா அவர்களின் கும்பல் தன்னையும் தன் தங்கையையும் நரபலி கொடுக்க திட்டமிட்ட முயற்சி செய்ததில் தன் தங்கை மடோனா பலியாகிவிட்டதால் அங்கிருந்து விஜய் மட்டும் தப்பிவிடுகிறார்.

அதன்பிறகு யாருக்கும் தெரியாமல் காஷ்மீரில் வசிக்கும் பார்த்திபனை மீண்டும் சஞ்சய்த் தத் கும்பல் மிரட்டி நரபலி கொடுக்க திட்டமிட்டு குடும்பத்தையும் தொந்தரவு செய்கிறது. ஆனால் தான் லியோ அல்ல, பார்த்திபன் என்று விஜய் கூறி அப்பாவிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அதன் பின் பார்த்திபன் தான் லியோ வா? இருவருக்கும் இடையிலான ஒற்றுமை என்ன?’ என்பதுதான் கதை. இப்படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்து, ஆக்சன் கதைக்களமாக இருந்தாலும், இக்காலத்தில் ஏன் நரபலி கான்செப்ட் வைத்தீர்கள் என லோகேஷுக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

லியோ படத்தின் வசூல் நிலவரம்!

இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்ததாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இப்படம் பாக்ஸ் ஆப்ஸில் ரூ.620 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு ஆன நிலையில் இப்படத்தின் நினைவுகள் பற்றி லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இப்படத்தில் இணைந்து பணியாற்றியவர்களும், ரசிகர்களும் அனுபவத்தை பகிர்ந்து வந்தனர்.

விஜய் கல்யாண மண்டபத்தை ஏன் விற்கனும்?

இந்த நிலையில், லியோ படம் எதிர்பார்த்த அளவு இல்லை, அது பல விமர்சனங்களை உள்ளடக்கிய தோல்விப் படம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பிரபல சினிமா விமர்சகர் ஒருவர், ’’லியோ படம் இத்தனை கோடி வசூலித்தது என்றால் ஏன் விஜய் சென்னையில் உள்ள தனது கலியாண மண்டபத்தை லியோ பட தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கொடுக்க வேண்டும்? லியோ படத்தில் போதிய லாபமில்லை. அதனால்தான் விஜய் இப்படத்தின் நஷ்டத்திற்கு ஈடுகட்ட லலித்திற்கு மண்டபத்தை கொடுத்திருக்கிறார். மேலும், லியோ படம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக பரவலாக பேசப்பட்டது. இப்படத்திற்கு ஆயிரம் காரணம் கூறினாலும் ஸ்கிரிப்ட் என்னாச்சு? அதுலதான் இருக்கனும் ’’என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News