இசைமையாளர் தேவா மகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் தேவா. ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுக்கு இவர் இசையமைத்த படங்களில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பாரம மக்கள் முதல் எல்லோருக்கும் பிடித்தமான பாடல்களாக இருந்தததால் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.
வீட்டு வாடகை பிரச்சனை
இவருக்கு ஸ்ரீகாந்த் தேவா என்ற மகனும், ஜெயப்பிரதா என்ற மகளும் உள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக சினிமாவில் பணியாற்றி வரும் நிலையில் மகள் ஜெயப்பிரதா சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் வசித்து வரும் தேவாவின் மகள் வீட்டை வாடைகைக்கு விட்டிருக்கும் நிலையில் அதில் குடியிருக்கும் பெண் ஒருவர், வீடியோ வெளியிட்டு அதில், தன்னை தேவானின் மகள் கொலை செய்ய முயல்வதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட பழனியில் உள்ள ஜெயப்பிரதா வீட்டில் கடந்த ஓராண்டாக வீட்டில் தீபிகா என்ற பெண் தன் கணவருடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ஆனால் ஓராண்டாக அவர் வாடகை பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜெயப்பிரதா, படபழனி காவல் நிலையத்திற்ச் சென்று அவர் மீது புகார் அளித்தார்.
அப்போது இரு தரப்பினரையும் அழைத்த போலீஸார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் செய்து வரும் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் வாடகை செலுத்தத் தவறியதாகவும், ஆனால் வாடகைப் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுத்து விடுவதாக தீபிகா கூறிய நிலையில், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
தொழில் நஷ்டத்தால் வாடகி தராத தீபிகா
அதன்பின்னும் தீபிகா வாடகை பாக்கியை செலுத்தவில்லை என கூறப்படும் நிலையில், அவர் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், ‘’ஜெயப்பிரதாவின் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் 7 பேர் கத்தியுடன் வீட்டிற்கு வந்து தீபிகாவையும் அவரது குடும்பத்தினரையும் கத்தியைக் காட்டி மிரட்டி, பொருட்களை உடைத்து கொலைமிரட்டல் விடுத்துவிட்டு, இங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களின் தாக்குதலில் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதே பெரிய விஷயம். எனக்கும் என் கணவரின் உயிருக்கம் எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதுக்கு காரணம் ஜெயப்பிரதா தான்’’ என்று அந்த வீடியோவில் குற்றம்சாட்டியுள்ளார்.
தீபிகா வீடியோ வெளியிட்ட நிலையில், இதுகுறித்து, 100 க்கு கால் செய்து தீபிகா புகார் அளித்திருக்கிறார். பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரிடம் அவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என தெரிகிறது. எழுத்துப்பூர்வமாக அவர் புகார் அளித்தால் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பரவாகி வரும் நிலையில் போலீசார் மீண்டும் விசாரணை செய்து வருகின்றனர்.