செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

இனி வாலாட்டுவியா? சூப்பர் ஸ்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை பொறி வைத்து பிடித்த போலீஸார்

சமீபத்தில் சல்மானுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதும், அவரது வீட்டை உளவு பார்க்க பிரபல தாதா சிறையில் இருந்தே 60 ஆட்களை நியமித்திருப்பதாகவும் வெளியான தகவல் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சல்மான் கானுக்கு கொலைமிரட்டல் விடுத்த நபரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் சல்மான் கான். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவருக்கு கோடிகணக்கான ரசிகர்கள் இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் தபங், டைகர் 3 ஆகிய படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றன. அதேபோல் ஷாருக்கானின் பதான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்ததும் பெரும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் சல்மான்கான்.

சூப்பர் ஸ்டாருக்கு கொலை மிரட்டல்

அதன்படி, இந்தியில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்கத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கவிருக்கிறார் சல்மான் கான். இப்படம் ஒட்டுமொத்த சினிமாத்துறையினரின் கவனத்தை ஈர்த்து சில மாதங்களே மீடியாக்களில் பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில் 58 வயதான சல்மான் கானுக்கு சமீபத்தில் பிரபல கேங்ஸ்டரிடம் இருந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில், சல்மான் கானுக்கும், அவரது மும்பை பந்த்ராவின் கேலக்ஸி அடுக்குமாடி வீட்டிற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியதால், எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எச்சரிக்கை காரணமாக தன் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள சல்மான் கான், உயிருச்சு அச்சுறுத்தல் விடுத்திருப்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் துபாயில் இருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான புதிய குண்டுதுளைக்காத சொகுசு காரை வாங்கி அதில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சல்மான் கான் வீட்டிற்கு அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த நிலையில், சல்மான் கானை கொல்வதற்காக, சிறையில் உள்ள பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்பட்டது. இதுபற்றி போலீஸார் அதிரடி விசாரணை நடத்தி, இச்சம்பவம் தொடர்பாக ஆயுதங்களை சப்ளை செய்ததாகக் கூறி 2 பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

5 கோடி பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

இதற்கிடையே, கடந்த 17 ஆம் தேதி மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். அதில்,’’ சல்மான் கான் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் எனில் ரூ.5 கோடி தர வேண்டும் எனக் கேட்டு அதில், ’’சல்மான் கானின் உயிரைப் பறிக்காமல் இருக்க ரூ.5 கோடி தர வேண்டும்! இதைச் செய்யாவிட்டால் சமீபத்தில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், சல்மான் கானின் நண்பருமான பாபா சித்திக்கைவிட சல்மான் கான் பயங்கரமான முறையில் கொல்லப்படுவார்’’ என மிரட்டல் விடுத்திருந்தனர்.

salman khan
இதுதொடர்பாக மும்பை ஓர்லி போலிஸார் வழக்குப் பதிவு செய்து வாட்ஸ் எண்ணுக்கு மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்த நிலையில், குற்றவாளி ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மும்பையைச் சேர்ந்த ஷேக் ஹூசைன் என்று தெரியவந்தது. இந்த மிரட்டல் சம்பவத்தில் அவர் மட்டும்தான் ஈடுபட்டாரா? இல்லை குழுவாக இணைந்து செயல்பட்டார்களா? என்பது பற்றி தற்போது அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News