TVK conference: விஜய் அரசியலுக்கு நுழைந்ததிலிருந்து தமிழக வெற்றி கழகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதில் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு மாநாடு நடந்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பக்கவாக பிளான் பண்ணி எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து பண்ணுகிறார்கள்.
அந்த வகையில் மாநாட்டுக்கு உள்ளே வருவதற்கு ஐந்து வழிகளும், வெளியே போவதற்கு 15 வழிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 300 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பக்கமும் குடிதண்ணீர் மற்றும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வைக்கப்பட்டு சில ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கையாக நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவராக முதல் முறையாக மாநாட்டில் கலந்து கொள்ள போகும் விஜய் என்ன பேச போகிறார், என்ன கொள்கையை பற்றி சொல்லப் போகிறார் என்பதை கேட்பதற்கு ஒட்டு மொத்த மக்களுமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் விஜய்யின் ரசிகர்கள் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தளபதிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த மாநாட்டில் விஜய் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசப்போகிறார். அப்படி பேசும் பொழுது விஜய் ரசிகர்களையும் அஜித் ரசிகர்களையும் சமாதானப்படுத்தும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக மாநாட்டை ஏற்பாடு பண்ணியவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் பேசும் பொழுது நடுவே மாநாடு குறித்து நடிகர் அஜித் ஒரு வாழ்த்து கடிதம் வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாயிருக்கிறது.
அந்த வாழ்த்து கடிதத்தை விஜய் வாசித்து இரு தரப்பு ரசிகர்களையும் சமாதானப்படுத்தி ஒன்று இணைப்பதாக திட்டம் தீட்டி இருக்கிறார்கள். அரசியலுக்கு போகும் விஜய் இனிமேலும் சண்டை சச்சரவுகள் வேண்டாம் நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். அதுபோல நீங்களும் ஒற்றுமையாக உங்களுக்குள் எந்தவித சண்டையும் வேண்டாம் என்று சொல்லும் விதமாக இந்த மாநாட்டில் அஜித் வாழ்த்துக்களை வாசிக்கும்போது விஜய் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் விஜய் அரசியலுக்குள் நுழைந்ததற்கு பின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயங்களும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்கிறது. அந்த வகையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு எந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.