சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.2000 கோடி வசூலித்த சூப்பர் ஹிட் படத்தில் எங்களுக்கு 1 கோடி ரூபாய் மட்டும்தான் கொடுத்தார்கள் என பபிதா போகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கல் படம்
இந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கான், சாக்ஷி தவர், பாத்திமா சானா சாய்க், சாய்ரா வாசிம், சான்யா மல்ஹோத்ரா, ஆகியோர் நடிப்பில் நிதிஸ் திவாரி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெளியான படம் தங்கல். இப்படத்தை அமீர்கான் அவரது முன்னாள் மனைவி கிரன் ராவ், சித்தார்த் ராய் கபூர் உள்ளிட்டோர் தயாரித்திருந்தனர். இப்படத்திற்கு பிரிதம் மியூசிக் அமைத்திருந்தார். இப்படம் ரூ.70 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 2000 கோடிக்கு மேல் வசூலிதததாக தகவல் வெளியானது.
இப்படம் பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்குமார் என கேள்வி எழுந்த நிலையில் பல திரும்பங்களுக்கு மத்தியில் சாதனை படைத்தது. அதன்படி, தங்கல் படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.300 மட்டுமே வசூலித்தது. அதன்பின், பாகுபலி மடம் மாதிரியே ரூ.1000 கோடி வசூலிட்டிய 2 வது படம் என்ற சாதனை படைத்தது. சீனாவில் தங்கல் திரைப்படத்தை வெளியிட்ட பிறகுதான் அந்த வசூலையும் தாண்டி ரூ.2000 கோடி வசூலை எடிட்டியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தைப் பற்றிய விவாதம் இணையத்தில் நடந்து வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக உறுப்பினர் பபிதா போகத் குற்றச்சாட்டு
அதன்படி, தங்கல் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு தியேட்டரில் வெளியாகி ரூ.2000 கோடி வசூலித்த நிலையில் இப்படத்தின் மூலம் தன் குடும்பத்திற்கு ரூ.1 கோடிதான் கிடைத்தது என பபிதா போகத் தெரிவித்துள்ளார். இது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அண்மையில் மகாவீர் போகத்தி இளைய மகளும், பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அதில், ‘’எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை அமீர்கான் படமாக எடுத்து, அப்படம் சூப்பர் ஹிட்டாகவே அதன் மூலம் ரூ.2000 கோடி சம்பாதித்தார். ஆனால், இப்படத்தை எடுப்பதற்காக எங்களிடம் அனுமதி பெற ரூ.1 கோடி மட்டும்தான் கொடுத்தனர்’’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள், ‘அதாவது 8 ஆண்டுகளுக்கு முன் 1 கோடி ரூபாய் என்பது சிறிய தொகையா? ’அதுவும் பெரிய தொகைதான். அன்றைக்கு ஒப்பந்தம் போட்டு படமெடுக்கலாம் என அனுமதி கொடுக்க 1 கோடி ரூபாய் பணத்தைப் பெற்று அப்படம் ஹிட்டாகி வசூல் குவித்து இத்தனை ஆண்டுகள் ஆனபிறகு சிறிய தொகைதான் கொடுத்ததாக கூறுவது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் பெரிய தொகைதான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேசமயம் இப்படத்தை எடுக்கவும், அப்படத்தை தயாரிக்கவும் அதை தியேட்டரில் விநியோகிக்கவும், சீனாவில் வெளியிடலும் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் அமீர்கான் தரப்பிலும் முயற்சி எடுக்கப்பட்டதால் தான் இப்படம் அத்தனை கோடி வசூல் குவித்தது. இப்படத்தின் 2 ஆம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொங்கி எழுந்த ரசிகர்கள்
சில நடிகர்கள் மாதிரி படத்தில் நடிப்பதுடன் மட்டும் அமீர்கான் இருந்திருந்தால் இத்தனை கோடி வசூல் வந்திருக்காது. இப்படம் இமாயல வெற்றி பெற்று, இந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பதற்கு அமீர்கானும் ஒரு காரணம்! இப்படியிருக்க இத்தனை ஆண்டுகள் கழித்து அமீர்கானுக்கு எதிராக பேசிவரும் பபிதா போகத்தின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குற்றச்சாட்டைக் கேட்டு பொங்கி எழுந்த அமீர்கான் ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ’அரியானாவில் மகாவீர் போகத் என்ற மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியாளித்து கடுமையான பயிற்சிகள் மூலம் அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார்.’ இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அமீர்க் கான் நடித்துத் தயாரித்து வெளியான படம்தான் தங்கல். இப்படம் அப்போது வெளியாகி 2 ஆயிரம் கோடி வசூலித்த முதல் படம் என்ற சாதனை படைத்த நிலையில், இப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்து பபிதா போகத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.