புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

கூடா நட்பினால் தலையில் துண்டை போட்ட அமீர்.. மொத்தமாக முடித்து விட்ட நீதிமன்றம்

போதை கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து, ஜாபிர் சாதிக்-க்கு நெருக்கமான பலரிடம் விசாரணையானது நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர், ஜாபர் சாத்திக்கின் நண்பர்.  அது மட்டுமின்றி, இவர்கள் இருவரும் சேர்ந்து பல தொழில்களும் செய்து வந்தனர்.  இதனால் தொடர்ந்து இயக்குனர் அமீரிடமும் போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்று கூறி, ஜாபர் சாதிக் மற்றும் அமீர் ஒன்றாக இணைந்து நடத்தி வந்த நிறுவனங்கள், வீடு போன்றவற்றை சோதனை செய்தார்கள் அமலாக்க துறையினர்.  இப்படி இருக்க சட்டவிரோத பணப்பரிமாற்றம் அம்பலமாக்கிருக்கும் நிலையில், ஜாபர் சாதிக்கின் மனைவி, சகோதரர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

சம்மன் அனுப்பிய கோர்ட்..

இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து ஜாபர் சாதிக், அமீர் உட்பட 12 பேர் மீது அமலாக்க துறை 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  இந்த குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை கூடுதல் சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  இதில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக அமீருக்கு சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இதனால் தற்போது மண்டை வலியில் உள்ளார் அமீர். கூடா நட்பு கேடில் முடியும் என்று சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள், “Ameer Bro mindvoice be like:  முடிச்சு விட்டீங்க போங்க..” என்று நக்கல் செய்து வருகின்றனர்.  

- Advertisement -spot_img

Trending News