வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024

ரத்தன் டாடா என்னிடம் பணம் கேட்டார்.. அப்போ நான்.. அமிதாப் சொன்ன தகவல்

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அன்று, ரத்தன் டாடா தனது 86 வயதில் மறைந்தார். இவரது இறப்பு பல குடும்பத்தினர் மத்தியில் தனது சொந்த குடும்ப உறுப்பினர் இறந்த சொகத்தையே ஏற்படுத்தி இருந்தது. வாழ்ந்த வரை இவர் ஒரு மகாத்மாவாகவே வாழ்ந்தார். இறந்த பின்பும், பாரபட்சம் இல்லாமல், தன் இல்லத்தில் பனி புரிந்தவர் உட்பட அனைவருக்கும் சொத்தை பங்கிட்டு உயில் எழுதி வைத்திருந்தார்.

இந்த நிலையில், crorepathi நிகழ்ச்சியில் ரத்தன் டாடா பற்றி அமிதாப் சொன்ன ஒரு தகவல் பலருக்கு மீண்டும் ஒரு கலக்கத்தை கொடுத்துள்ளது. ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் நடிகர் போமன் இரானி மற்றும் கொரியோகிராபர் ஃபரா கானுடன் அமிதாப் பச்சன் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

என்னிடம் வந்து பண உதவி கேட்டார்

அமிதாப் பச்சன் கூறியதாவது, “ஒருமுறை நாங்கள் ஒரே விமானத்தில் பயணித்தோம். இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவரை வரவேற்க வரவிருந்தவர்கள் யாரும் இல்லை. உடனே அவர் ஒரு தொலைபேசி பூத் அருகே சென்றார். பின்னர் என்னிடம் வந்து, ‘அமிதாப், உங்களிடம் கொஞ்சம் பணம் இருக்குமா? எனக்கு ஃபோன் பணம் இல்லை..’ எனக் கூறினார்.”

“இந்த சம்பவம் எனக்கு பெரும் வியப்பை தான் கொடுத்தது. இவ்வளவு பெரிய தொழிலதிபர், அவரை வரவேற்க ஒருவரும் வரவில்லை, எந்த ஆரவாரமும் இல்லை.. முக்கியமாக பாலன்ஸ் இல்லை என்று என்னிடம் வந்து எளிமையாக உதவி கேட்டார். ரத்தன் டாடா தனது வாழ்க்கையில் பண்பாடும் எளிமையுடனும் ஒப்பற்ற மனிதாபிமானத்துடனும் பலருக்கு உதவியவர்.”

“அப்பேர்பட்டவர் என்னிடம் வந்து எளிமையாக உதவி கேட்டது, எனக்கு பெரும் வியப்பையே கொடுத்தது” எனக் கூறியிருந்தார். இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக அவரது இறப்பை நினைத்து மீண்டும் கலங்கி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News