ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

ஆரம்பித்த கையோடு வியாபாரமும் பிச்சிக்கிட்டு போன தளபதி 69.. அந்தர் பல்டி அடித்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்

தளபதி 69 படம் திட்டமிட்டபடி நவம்பர் முதல் வாரத்திலிருந்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. கே வி என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க எச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் தவிர பூஜா ஹெக்டே, மம்தா பஜிலு, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி போன்றவர்கள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை தயாரித்து வரும் கே வி என் நிறுவனம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் என்று கூறி வந்தார்கள் ஆனால் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் பார்க்க அப்படி தெரியவில்லை. ஏற்கனவே இந்த படத்தை மீடியம் பட்ஜெட்டில் பண்ணுமாறு வினோத்திடம் கூறியிருக்கிறார்கள். விஜய் அவர்கள் பெரிய நிறுவனம் என்று தான் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இது ஒரு புறம் இருக்க தளபதி 69 படத்தை அதற்குள் பிசினஸ் செய்து விட்டார்கள். பொதுவாக படம் பாதி வரை சென்ற பின்னர் தான் வியாபாரம் பற்றி பேசுவார்கள். ஆனால் தளபதி 69 படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பெரும் தொகைக்கு ஓவர்சீஸ் வியாபாரம் நடந்துள்ளது. துபாயை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் இந்த படத்தை வாங்கியுள்ளது.

கேவிஎன் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் நேராக துபாய் சென்று அங்கு வியாபாரம் நடத்தியுள்ளனர். பல தமிழ் படங்களை வாங்கிய தயாரிப்பு நிறுவனமாகிய பார்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் வாங்கியுள்ளனர். குறிப்பாக அவர்கள் விஜய் படம் என்றால் விட்டுக் கொடுப்பதே இல்லை முதல் ஆளாக வாங்கி விடுவார்கள். ஏற்கனவே கோட் படத்தின் ஓவர் சீஸ் உரிமையையும் இவர்கள்தான் வாங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய்க்கு தளபதி 69 படத்தின் வெளிநாட்டு உரிமைகள் விற்கப்பட்டுள்ளது. இதனை ஒரே பேமெண்டாக கொடுக்கும்படி கேவிஎன் நிறுவனம், பார்ஸ் நிறுவனத்திடம் கண்டிஷன் போட்டுள்ளனர். அவர்களிடமே நூறு கோடிகள் பைனான்ஸும் வாங்கி உள்ளனர். இப்படி பைனான்ஸ் வாங்கி தான் கே வி என் நிறுவனமும் படம் பண்ணுகிறார்கள். ஆரம்பத்திலேயே இது விஜய்க்கு தெரியாமல் போய்விட்டது. தெரிந்திருந்தால் நிச்சயம் படம் கை மாறி இருக்கும்.

.

- Advertisement -spot_img

Trending News