இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் முட்டை பூச்சி.. அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர், ஓட்டிங் ரிப்போர்ட்

Biggboss 8 Voting: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 11 போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். அதில் ரசிகர்கள் சில வாரங்களாக ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளரும் இருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை பெண்கள் அணியை கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஆர் ஜே ஆனந்தி தான். ஆரம்பத்தில் இவர் சைலன்ட் மோடில் இருந்தார். இப்பவும் அது போல் இருந்தாலும் அவ்வப்போது இவர் செய்யும் சில வேலைகள் ஆடியன்ஸை கடுப்பாக்கி வருகிறது.

அதனாலேயே நாமினேஷனுக்கு இவர் வந்தால் வெளியேற்ற வேண்டும் என சோசியல் மீடியாவில் கமெண்ட்கள் குவிந்தது. அதன்படி தற்போதைய ஓட்டிங் நிலவரம் யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு வாரமும் தவறாமல் நாமினேஷனுக்கு வரும் முத்துவுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. அதன்படி தற்போது வாக்கு எண்ணிக்கையில் அவர்தான் 60,000 வாக்குகளை நெருங்கி முதலிடத்தில் இருக்கிறார்.

பிக்பாஸ் ஓட்டு நிலவரம் யாருக்கு சாதகம்.?

அவருக்கு அடுத்ததாக விஷால், ஜாக்லின், தீபக், பவித்ரா, ரஞ்சித், அருண், அன்சிதா ஆகியோர் இருக்கின்றனர். மேலும் கடைசி மூன்று இடங்களில் ஆர் ஜே ஆனந்தி, சாச்சனா, சுனிதா ஆகியோர் உள்ளனர்.

இவர்களுக்குள் பெரிய அளவில் ஓட்டு வித்தியாசங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் சுனிதா தற்போது வரை 10648 வாக்குகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்.

ஒரு விதத்தில் இவரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதுதான் பார்வையாளர்களின் விருப்பம். அந்த அளவுக்கு இவர் எரிச்சலூட்டும் போட்டியாளராக இருக்கிறார். அதே சமயம் சாச்சனா மூட்டை பூச்சி போல் வீட்டுக்குள் ஏகப்பட்ட விஷயங்களை செய்து வருகிறார்.

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த சீசன் ஜூலி தான் இவர். அதனால் இவர் வெளியேறுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் ஓட்டிங் நிலவரம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்