வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விமர்சனங்களை கடந்து மகன் திருமணத்தை நடத்திய நெப்போலியன்.. மருமகள் பற்றி சொன்ன எமோஷனல் வார்த்தை

Nepoleon: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் திருமணம் தற்போது கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயாவை கரம் பிடித்துள்ள தனுசுக்கு தற்போது திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் இந்த ஜோடியின் சங்கீத், திருமண கொண்டாட்டங்கள் உட்பட ஒவ்வொரு நிகழ்வின் போட்டோக்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் நேற்று திருமணம் நடந்த சமயத்தில் நெப்போலியன் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டது பார்ப்பவர்களையும் நெகிழ வைத்து விட்டது.

மகன் மீது ரொம்பவும் பாசம் வைத்திருந்த நெப்போலியன் அவர் பார்க்க வேண்டும் என விரும்பிய ஜப்பான் நாட்டிலேயே திருமணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்துள்ளார். ஆனால் இந்த திருமணம் நடப்பதற்கு முன்பு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

மகன் திருமணத்தில் உணர்ச்சிவசப்பட்ட நெப்போலியன்

ஏனென்றால் தனுசுக்கு அரிய வகை நோய் இருப்பதால் அவரால் நடக்க முடியாது. அப்படி இருக்கும்போது எதற்காக இந்த திருமணம் என நாக்கில் நரம்பில்லாமல் பேசியவர்கள் ஏராளம். ஆனால் தனுஷ் அதற்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த சூழலில் தற்போது விமர்சனங்களை கடந்து திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இதை நெப்போலியன் எமோஷனல் வார்த்தைகள் மூலம் குறிப்பிட்டுள்ளார். அதாவது பிறந்ததிலிருந்து தனுஷை என் மனைவி தான் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.

நாங்கள் மூன்று பேரும் தனுசுக்கு எல்லா விதத்திலும் துணையாக இருக்கிறோம். ஆனால் இப்போது எங்களுக்கு பக்க பலமாக மருமகள் வந்துவிட்டார் என மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். தற்போது திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் இந்த ஜோடி எப்போதும் சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.

Trending News