வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அமெரிக்க அதிபரின் சம்பளம் இத்தனை கோடியா? என்னென்ன சலுகைகள் தெரியுமா?

உலகமே உன்னிப்பாக கவனித்த விஷயம் அமெரிக்க அதிபர் தேர்தல். கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த இத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு 51 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற 270 எலக்ட்ரோ வாக்குகள் தேவைப்படும் நிலையில், 277 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47 வது அதிபராக தேர்வாகியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

உலக நாடுகளுக்கு நாட்டாமை செய்யும் அண்ணனாக அமெரிக்கா இருக்கும் நிலையில் அந்த நாட்டின் அதிபர் பதவி செல்வாக்கான பதவியாக கருதப்படுகிறது. அதனால் அதிபர் சம்பளம், அவருக்கான சலுகைகளும் அதிகம். இதுகுறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபரின் சம்பளம் – சலுகைகள்

1788 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்காவின் ஒவ்வொரு ஜனதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். அதன்படி, அதிபருக்கான அடிப்படை சம்பளம் வருடத்திற்கு ரூ.3.36 கோடியாகும், அதாவது இதற்காக மட்டும் ஆண்டுக்கு 4 லட்சம் டாலர்கள் செலவாகும் எனவும், செலவு தொகையாக ரூ.42 லட்சமும், வரியில்லா செலவு தொகையாக ரூ.84 லட்சமும், பொழுதுபோக்கு தொகையாக ரூ.42 லட்சமும், வெள்ளை மாளிகையின் மாற்றம் ரூ.84 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபருக்கு அவர் பதவியில் உள்ள காலவரை வெள்ளை மாளிகையில் தங்கிக் கொள்ளலாம். அங்கு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சகல வசதிகளும், பணியாட்களும், அலுவலக உதவியாளர்களுக்கு என தனியறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண்டுதோறும் இழப்பீடு தொகை, அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்பான சொகுசு வாகனப் பயன்பாடு, , உலக நாடுகளுக்கு பயணிக்கவும், ஐக்கிய அமெரிக்கா மாகாணங்களுக்குச் செல்லவும் தனி ஹெலிகாப்டர் வசதி உள்ளது.

தற்போது நடைமுறையில் அதிபரின் சம்பளம் என்பது கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து இன்னும் மாற்றப்படவில்லை. அதாவது கடைசியாக ஜார்ஜ் புஷ் பதவியேற்றபோது அதிபருக்கான சம்பளம் மாற்றப்பட்ட நிலையில், இன்னும் புதிய சம்பள விகிதம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்புக்கு பின் அதிபரின் சம்பளம் மாற்றப்படுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது.

இத்தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து அதிபர் ஜோ பைடன் போட்டியிட்ட நிலையில், அவர் மீதான விமர்சனங்களை அடுத்து விலகினார். அவருக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு தோற்றார். அதேசமயம், அமெரிக்காவில் 538 எம்பிக்கள் இருக்கும் நிலையில், 538 எலக்ட்ரோ காலேஜ் உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில்தான் அதிபரும் துணை அதிபரும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News