Vijay-Seeman-Sathyaraj: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடத்தினார். அப்போது அவர் திராவிடமும் தமிழ் தேசியமும் என்னுடைய இரு கண்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. இந்த மாநாட்டிற்கு முன்பு விஜயை ஆதரித்த சீமான் தற்போது மேடைகளில் அவரை கடுமையாக பேசி வருகிறார்.
இது பரபரப்பை கிளப்பி வரும் சூழலில் சத்யராஜ் தற்போது கலந்து கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் திராவிடம் தமிழ் தேசியம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே ஒன்றுதான் என பிரபாகரனே கூறியிருக்கிறார். நான் பேரறிவாளன் ஜாமினில் வந்திருந்த போது அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன்.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.?
அப்போது கதவை திறந்த உடனே என் கண்ணில் பட்டது பெரியார் பிரபாகரன் இருவரின் படங்கள் தான். இதிலிருந்து திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என தெரிகிறது. மேலும் 1975இல் கியூபாவில் உலக போராளிகள் மாநாடு நடைபெற்றது.
அதற்கு பிரபாகரனால் செல்ல முடியவில்லை. அதனால் அவர் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் தமிழ் மொழி பேசுகிற திராவிடர் ஆகிய நாங்கள் என குறிப்பிட்டு இருந்தார். இதிலிருந்தே தெரிகிறது திராவிடம் தான் தமிழுக்கு அரண். அதுவே தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானது.
ஆரியம் திராவிடத்தை எதிர்க்கலாம். தமிழ் தேசியம் என்ற பெயரில் ஆரியத்திற்கு துணை போவது ஆபத்தானது. இரு மொழி கொள்கை இருக்கலாம் மும்மொழி கொள்கை எதற்கு என சத்யராஜ் அந்த நிகழ்ச்சியில் தன் கருத்தினை முன் வைத்துள்ளார். இதன் மூலம் ஒரு பெரும் சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.