கடந்த மாதம் வெளியான படங்களான சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல், சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரூ.250 கோடி வசூலித்தது. இந்த நிலையில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸாகவுள்ளது.
சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில், திஷா பதானி, கருணாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகி ரஜினியின் வேட்டையனோடு போட்டி போட வேண்டியது.
ஆனால் தனியாக ரிலீஸாகி வசூலில் கல்லா கட்டவும் அதிகத் திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ரஜினி படத்துக்கு வழிவிட்டு ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்தன. தற்போது கங்குவா பெரிய பட்ஜெட் படம் என்பதால் தைரியாக சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய தயாரானது. அதன்படி, உலகம் முழுவதும் 38 மொழிகளில், 11,500 தியேட்டரில் சோலோவாக ரிலீஸாகும் எனக் கூறினர்.
பீனிக்ஸ்
ஆனால் இப்படத்திற்குப் போட்டியாக சில படங்கள் நவம்பர் 14 ஆம் தேதியில் ரிலீஸாகிறது. ஆம். விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் பீனிக்ஸ் படம் கங்குவாவுக்குப் போட்டியாக ரிலீசாகிறது. இப்படத்தை அனல் அரசு இயக்கிய நிலையில், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
எமக்குத் தொழில் ரொமான்ஸ்
அதேபோல், அசோக் செல்வன், அவந்திகா கேசவன் ஆகியோர் நடிப்பில், பாலாஜி கேசவன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் திருமலை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். இப்படம் வரும் நவம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகிறது.
சூர்யாவின் கங்குவாவுக்கு பெரியளவில் தியேட்டர் கிடைத்துள்ள நிலையிலும், பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ் ஆகிய படங்களின் விமர்சனத்தைப் பொருத்து, தியேட்டர்களில் இப்படங்கள் அங்கு திரையிடப்படலாம்.
ஒருவேளை கங்குவாவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் பட்சத்தில் மேலும் வசூலை குவிக்கும் நோக்கில் அப்படமே மேலும் தியெட்டர்களில் சில நாட்களுக்கு திரையிடப்படலாம் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் தீபாவளிக்கு வெளிவந்த அமரன் சக்க போடு போட்டு 50 சதவீத தியேட்டர்களை விடாமல் பிடித்து உள்ளது இது கங்குவாவிற்கு இன்னும் தலைவலி தான்.