பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து அக்டோபரின் கட்சியின் முதல் மா நாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டிய விஜய் தமிழகத்தில் அடுத்த ஒரு சில வாரங்களுக்கு தவெகவை பற்றியே அரசியல் விமர்சகர்களும், மற்ற கட்சியினரும், மீடியாவும் என அவர் நினைத்தபடியே எல்லாமும் சரியாக நடந்தது.
ஆனால் அவர் நினைத்துக் கூட பார்க்காத ஒன்றும் நடந்தது. ஆமாம், அந்த மாநாட்டுக்கு முன்புவரை விஜய்யுடன் தம்பியாக பழகிவந்த சீமான், மேடையில் விஜய் பேசியதற்குப் பதிலடியாக, நாம் தமிழர் கட்சி மேடையில் விஜய்யை கடுமையாக விமர்சித்து, திமுகவுக்கு போட்டி, அதிமுக, பாஜக, தவெக அல்ல, நாம் தமிழர் தான் என்று சூழுரைத்தார்.
அதைத்தொடர்ந்து கடுமையாக தவெகவின் கொள்கைகளையும் அவர் முன்மாதிரியாக கொண்டிருந்த தலைவர்களும் நாங்கள் அடையாளம் காட்டியது, தமிழ்த் தேசியம் வேறு திராவிடம் வேறு என்று முழங்கினார்.
இதற்கெல்லாம் இன்னும் விஜயிடம் இருந்து பதில் வரவில்லை. ஆனால் விஜய்க்குப் பதிலாக சத்யராஜ் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்தார். இதையடுத்து, சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய விஜய், தன் துறையில் ஜாம்பாவானாக இருக்கும் கமலுக்கு வாழ்த்துகள் கூறவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
இப்படி விஜய்யின் ஒவ்வொரு பேச்சும், செயலும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருக்கும் நிலையில், அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைத்து, அதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு தான் முதல்வர் ஆவதிலேயே குறியாக இருக்கிறார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், கடந்தாண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டு அரசியலில் பிரளத்தையே ஏற்படுத்தினார். ஆனால் இதை திமுகவினரே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கூலாக அவ்விசயத்தை அவர்கள் டீல் செய்தனர். ஆனால் செந்தில் பாலாஜி கைது விவகாரம்தான் ஆளுங்கட்சியை அதிகம் பாதித்தது. தற்போது ஜாமினில் அவரும் விடுதலையாகி அமைச்சராகிவிட்டதால் வரும் தேர்தலுக்கு அக்கட்சியும் ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில், அண்ணாமலை பாணியில் விரைவில் திமுகவின் ஊழல் பட்டியலை விஜய் வெளியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகிறது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்து வருகிறது.
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடும் விஜய்? அவருக்கு முன் இருக்கும் கேள்விகள்
அதில், விஜய் தான் நடித்த படங்களில் எத்தனை படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளார்? பிளாக் மணியில்லாமல் அத்தனையும் சரியான முறையான பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்களா? திமுக ஊழல் பட்டியல் வெளியிட தயார் என்றால் முந்தைய அதிமுக ஆட்சியில் ஊழல் பட்டியலை வெளியிடவும் அவர் தயாரா?
அப்படியென்றால் மாஸ்டர் ஷூட்டிங்கின்போது ஐடி துறையினர் ஏன் விஜய்யை திருநெல்வேலியில் இருந்து கொத்தாக தூக்கி சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்? சொகுசு காருக்கு வரி செலுத்தாமல் ஏன் நீதிமன்றம் வரை அவர் சென்றார்?
தன் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்பனைக்கு ஒரு நாளாவது, அல்லது ஒரு படத்தின் ரிலீஸீன் போதாவது அவர் கேட்டதுண்டா? அரசியலில் இறங்கும் முன் பரீட்சைக்கு செல்லாமல் படத்துக்குப் போன ரசிகர்களை கண்டித்ததுண்டா? என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிரடி ஆக்சனில் இறங்கும் முதல்படி இதுதானா? யார் கொடுத்த ஐடியா?
விஜய் தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளராக காட்டிக் கொள்ளாத நிலையில் அவர் யாரின் வழிகாட்டுதலில், அரசியலில் பயணிக்கிறார்? கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகும் நிலையில், மெதுவாக செயல்பட்டு சமூக வலைதளத்தில் அறிக்கையும் ஆப்பில் தொண்டர்கள் சேர்க்கையும் அறிவித்து விட்டு அவர் ஏசி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையின் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கவே அதிரடி ஆக்சனில் இறங்கும் முதல்படியாக திமுகவின் ஊழல் பட்டியலை அவர் வெளியிடப்போவதாக வெளியாகும் தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவருக்கு முன்னால் இருக்கும் கேள்விகளுக்கும் விஜய் மெளனம் கலைக்க வேண்டியது கட்டாயம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.