திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஸ்டைலிஷ் நடிகருக்கு வலை வீசும் இயக்குனர்கள்.. சத்தம் இல்லாமல் வெளிநாட்டுக்கு பறந்த காரணம்

Gossip: ஸ்டைலிஷ் நடிகர் நடிக்க வந்த புதுதிலேயே ஏகப்பட்ட பெண் ரசிகைகளை தன் பின்னால் சுற்ற வைத்தவர். அவரை போல் தான் மாப்பிள்ளை வேண்டும் என பெண்கள் அடம் பிடித்த ஒரு காலமும் இருக்கிறது.

ஆனால் இடையில் நடிகர் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் போனது. அதன் பிறகு தான் அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவும் பிசினஸில் முடி சூடா மன்னனாக அவர் இருப்பதும் தெரிய வந்தது.

இருப்பினும் அவர் மீண்டும் நடிக்க வருவாரா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருந்தது. அதை தீர்க்கும் பொருட்டு தம்பி நடிகரின் படத்தில் அட்டகாசமான ஒரு கேரக்டரில் நடித்து தன் ரீ என்ட்ரியை நங்கூரம் போல் அமைத்தார்.

ஸ்டைலிஷ் நடிகரை தேடும் இயக்குனர்கள்

அதை அடுத்து பவர்ஃபுல்லான கேரக்டரில் நடித்து வந்த அவர் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். இதுவரை நாம் பார்த்திராத அந்த கேரக்டர் அவருக்கு அப்படியே பொருந்திப் போனது. படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.

அதனாலேயே இப்போது பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை புக் செய்ய தவம் இருக்கின்றனர். ஆனால் இத்தனை பேர் வலைவீசி தேடியும் கூட நடிகர் சிக்கவில்லை.

சத்தம் இல்லாமல் வெளிநாட்டுக்கு பறந்து விட்ட நடிகர் ஆறு மாதம் கழித்து தான் சென்னை பக்கம் வருவாராம். ஏனென்றால் நடிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பிசினசையும் கவனிக்க வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளார்.

இதனால் நடிகர் மீண்டும் வரும் வரை இயக்குனர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். அவர் இங்கிருக்கும் ஆறு மாத காலத்தில் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். இப்படி ஆறு மாதம் வியாபாரம் ஆறு மாதம் நடிப்பு என நடிகர் ஒரு கொள்கையோடு இருக்கிறார்.

Trending News