Suriya In Kanguva: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இதுவரை தமிழ் படங்களில் காணாத அளவிற்கு ஒரு வரலாறு படமாகவும், 38 மொழிகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்கிரீனில் வெளியாக போகிறது. அத்துடன் இதுவரை சூர்யா நடிக்காத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
அதனால் எப்படியும் இப்படம் 2000 கோடி வசூலை அள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இதில் சூர்யா இரண்டு கேரக்டரில் மிரட்டி இருக்கிறார். ஒன்று காட்டுவாசி ஆகவும் இன்னொன்னு மாடர்னாக சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டிருக்கிறார்.
படபூஜை ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரை இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாளைக்கு கங்குவா ஒட்டுமொத்த ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் கங்குவா படம் ரிலீஸ் ஆகுவதில் எத்தனையோ பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும் சந்தித்து வந்திருக்கிறது.
அத்துடன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆனதால் இதோடு மோத விருப்பம் இல்லாமல் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தார்கள். அந்த வகையில் நவம்பர் 14 கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
அதாவது சூர்யாவின் கேரியரில் சுக்கிர திசையாக வெற்றி கொடுத்த இரண்டு படங்கள் நவம்பர் 14 தேதியில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. சூர்யாவின் கேரியரை தூக்கிவிட்டு மாஸ் காட்டிய படம்தான் நந்தா. அதே மாதிரி ரொமான்டிக் ஹீரோ என சூர்யாவை வர்ணிக்கும் அளவிற்கு வெற்றிக் கொடுத்த படம் வாரணம் ஆயிரம். இப்படி இந்த இரண்டு படங்களுமே நவம்பர் 14ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
அதேபோல சூர்யாவை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போகும் விதமாக கங்குவா படம் ஒரு சாதனை படைக்கும் அளவிற்கு வெற்றி பெறப் போகிறது. அதற்கு ஒரு அச்சாணியாக தான் நாளை கங்குவா படம் ரிலீஸ் ஆகப்போகிறது.