வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டெல்லி கணேஷ் எப்படிப்பட்டவர்.. இறப்பிலும் குறை சொல்லும் பயில்வான்

Delhi Ganesh : சிறந்த குணசித்திர நடிகர் ஆன டெல்லி கணேஷ் சமீபத்தில் இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடித்துக் கொடுக்கக்கூடியவர். அவருடைய இறப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

மேலும் கமலின் பெரும்பான்மையான படங்களில் டெல்லி கணேஷை பார்க்க முடியும். ஆனால் இப்போது கமல் வெளிநாட்டில் இருப்பதால் அவரது இறப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் டெல்லி கணேஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்த பிரபலங்கள் தங்களது நினைவளைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அவ்வாறு பயில்வான் ரங்கநாதன் பேசுகையில் டெல்லி கணேஷ் ஒரு நல்ல மனிதர் என்று குறிப்பிட்டு இருந்தார். நேரடியாக அவர் சொர்க்கத்திற்கு தான் செல்வார் என்றும் கூறினார். ஆனால் அதன் பிறகு அவர் டெல்லி கணேஷ் ஜாதியை குறிப்பிட்ட சில வார்த்தைகளை பேசி இருந்தார்.

டெல்லி கணேஷ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயம்

அதாவது கடந்த நான்கு வருடமாக டெல்லி கணேஷ் தனது பிராமினச் சமூகத்தின் மோகத்தில் இருந்தார். அதற்கான கூட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது தன்னையும் பலமுறை அழைத்துள்ளார். அப்போது நான் பிராமணர் இல்லை அதனால் இந்த கூட்டத்திற்கு வரவில்லை, தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று பயில்வான் சொன்னாராம்.

அதோடு சினிமாவுக்காக மூன்று பங்களா வைத்திருந்த டெல்லி கணேஷ் தனது மகன் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பங்களாவை விற்றுவிட்டார். அதுவே அவருக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்ததாகவும், தனது மகன் சினிமாவில் வெற்றி பெறவில்லை என்ற வருத்தம் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் 80 வயதாகும் டெல்லி கணேஷ் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற கவலையும் இருந்ததாக பயில்வான் கூறியிருக்கிறார். எப்போதுமே பலரையும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன் டெல்லி கணேஷ் இறப்பில் அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்லாமல் இருப்பினும் இவ்வாறு குறை சொல்வது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Trending News