சூர்யாவுக்கு சிறந்த ஓபனிங் கிடைக்குமா.? முதல் நாள் கலெக்ஷன் எதிர்பார்ப்பு

Kanguva First Day Collection Prediction : கங்குவா படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக கங்குவா படத்தின் ப்ரோமோஷனுகாக படக்குழு வெளிநாடுகள் என பல இடங்களில் சுற்றித்திரிந்தனர்.

சிறுத்தை சிவா, சூர்யா காம்போவில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர். சூர்யா ரசிகர்கள் கொண்டாடும் படியான படமாக கங்குவா அமைந்திருக்கிறது. அதுவும் ஆக்சன் காட்சிகளை மிரள விட்டிருக்கிறார்.

இரட்டை வேடத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில் கார்த்தி கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்திலேயே கங்குவா படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். ஏனென்றால் இப்படம் பான் இந்திய படமாக வெளியாகி உள்ளது.

கங்குவா முதல் நாள் கலெக்ஷன் எதிர்பார்ப்பு

அதாவது 13 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் முதல் படம் இதுவாகும். ஆகையால் வசூலும் பெரிய அளவில் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி முதல் நாளே கிட்டத்தட்ட 65 கோடி வரை கங்குவா படம் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் படம் முதல் நாளில் 42 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் பிரமாண்டமாக பிரமோஷன் செய்து வரும் கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் 65 கோடி என்பது சற்று குறைவுதான். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 30 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவுக்கு சிறந்த ஓபனிங் ஆகத்தான் அமையும்.

மேலும் படத்தில் சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை சற்று எரிச்சலை உண்டாக்கும் படி இருப்பதாக விமர்சனங்கள் எழுகிறது. ஆனாலும் இன்று விடுமுறை நாட்கள் இல்லை என்றாலும் கங்குவா படத்தின் வசூல் பெரிய அளவில் பேசப்படும் அளவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment