விஜய்யின் நடிப்பில் தற்போது ‘தளபதி 69’ படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ரிலீசான ‘கோட்’ படத்தினை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய்யின் கடைசி படம் என கூறப்படுவதால் ‘தளபதி 69’ மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.
ஆனால் விஜய்யின் கடைசி படம் என்று கூட பார்க்காமல் அமெரிக்க விநியோகஸ்தர் நக்கலாக ஒரு பதிவை போட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு போதுமான fund இல்லாத காரணத்தால், முன்கூட்டியே படத்தை விற்று, அதில் வரும் பணத்தை செலவு செய்துகொள்ளலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தான் தற்போது அமெரிக்கா விநியோகஸ்தரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
காசு இல்ல பா!
தளபதி 69 படத்தின் அமெரிக்க விநியோக உரிமை 25 கோடி என்று, அமெரிக்க விநியோகஸ்தர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதன் கூடவே அவர் நக்கலும் செய்துள்ளார். அதில், “அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. இந்த தொகையை கேட்டவுடன் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. படத்தை அடுத்தவாரம் வேறொரு விநியோகஸ்தர் வாங்குவார். வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவ்வளவு தொகை கொடுத்து நான் படத்தை வாங்கவேண்டும் என்றால், அந்த படம் தனியாக அமெரிக்காவில் மட்டுமே 60 கோடி வசூல் செய்தால் தான் எங்களுக்கு லாபம். இல்லையென்றால் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
நக்கலாக அவர் பதிவு போட்டாலும், அவர் சொன்ன லாஜிக் என்னவோ கரெக்ட் தான். என்ன தான் கடைசி படமாக இருந்தாலும், அங்கு அவருக்கு அவ்வளவு ஆடியன்ஸ் இருக்கிறார்களா என்பது தான் கேள்வி. இல்லை எனும் பட்சத்தில், இந்த தொகை கேட்டது, அதீதமாக உள்ளது. மேலும் பல விநியோகஸ்தர்கள், இவருடைய கடைசி படம் என்பதால், கோட் படத்தை விட அதிகமாக கேட்கிறார்கள். அது எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்றும் கூறி வருகின்றனர்.