இந்திய சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிப்பவர் ஏ.ரஹ்மான். இளையராஜா தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த 90 களில், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, இளம் புயலாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான்.
முதல் பட த்திலேயே தேசிய விருது வென்ற அவர், அடுத்து பம்பாய், ஜீன்ஸ், எந்திரன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி, இந்தியிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதன்பின், டானி பாயல் இயக்கிய ஸ்லம் டாக் மின்னியனார் படத்தில் சிறந்த பாடல், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் வென்று சாதனை படைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், இந்தியைத் தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சர்வதேச விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை
இந்த நிலையில், பிளசி இயக்கத்தில், பிரித்விராஜ், அமலாபால் ஆகியோர் நடிப்பில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியான படம் ஆடுஜீவிதம் – தி கோட் லைஃப். இப்பட த்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்பட த்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் பேசப்பட்டன.
‘வீட்டை அடமானம் வைத்து சவூதி அரேபியாவில் அலுவலக உதவியாளர் பணிகுச் செல்லும் பிரித்விராஜ், அங்குள்ள நபரால் கடத்தப்பட்டு, ஆடு மேய்த்து கஷ்டப்படும் நிலையில் அங்கிருந்து எப்படி தப்பி, இந்தியாவுக்கு வருகிறார்’ என்பதை படம் பார்ப்போர் மனதை உலுக்கும் வகையில் படமாக்கியிருந்தனர். இப்படத்துக்கு ஏ.ஆ.ரஹ்மானின் இசையும் பக்கபலமாக அமைந்திருந்தன.
இப்படத்தில் பெரியோனே ரஹ்மானே என்ற பாடலை ரபிஃக் முகமது என்பவருடன் இணைந்து ரஹ்மான் எழுதியிருந்தார். இப்பாடல் ரசிகர்களைக் கவர்ந்து. உலகளவில் ரிலீசாகும் படங் களின் இசையை அங்கீகரிக்கும் வகையில், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களை கெளரவிக்கும் வகையில், Hollywood Music in Media Academy என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
எனவே ஆடுஜீவிதம் படத்தில் இடம்பெற்ற பெரியோனே ரஹ்மானே பாடல், அப்பட த்துக்கான பின்னணி இசை என 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இவ்விருது கிடைக்கும் என ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.