கங்குவா பார்த்துட்டு கடுப்பில் ரசிகர்கள் செஞ்ச வேலை, எல்லை மீறிப் போறீங்க! இத்தோட நிறுத்திக்கோங்க

கங்குவா படத்துக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் கொடுத்த விமர்சனத்தில் இருந்து இன்னும் படக்குழு மீளவில்லை. ஆனாலும் தொடர்ந்து அப்படத்தை மட்டும் இதுவரை வரை இல்லாத அளவுக்கு ரவுண்டு கட்டி விமர்சித்து வருகின்றனர்.

பொதுவாகவே எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹிட் படங்களும் இருக்கும். பிளாப் படங்களும் இருக்கும். விஜய்க்கு சுறா, புலி உள்ளிட்ட படங்கள் கேரியரை அசைத்துப் பார்த்த படங்கள் என்றால் அஜித்துக்கு அசல், ரெட் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. அதேதான் ரஜினி, கமலுக்கும் கூட.

ஆனால் அப்படங்கள் வெளியாகும் முன் அவர்கள் கங்குவா படத்தின் புரமோசனுக்கு கொடுத்த மாதிரி ஓவர் பில்ட் அப் கொடுக்கவில்லை. அதனால் தோற்றதால் அப்படியே விட்டுவிட்டனர். நெட்டிசன்கள் எது கிடைத்தாலும் ட்ரோல் மெட்டீரியல்தான்.

சூர்யா, திஷா பதானி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில், சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான படம் கங்குவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஏற்கனவே ஓவர் ஹைப் ஏற்றித்தான் பல முன்னணி நடிகர்களின் படங்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றன.

அதைக் கருத்தில் கொள்ளாமல் கங்குவா புரமோசனில் எல்லா சேனலிலும் மேடைகளில், ஓவர் பில்டப் தான் இப்படத்துக்கு கொடுத்தனர். அதனால் ஆர்முடன் இருந்த ரசிகர்கள் நவம்பர் 14 ஆம் தேதி இப்படத்தின் ரிலீஸ் முதல் நாளிலேயே படம் பார்த்து அதிருப்தி அடைந்தனர். ஏகப்பட்ட குறைகள் அடுக்கினர். சினிமா விமர்சகர்களும் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டனர்.

இதனால் சூர்யாவுக்கு ஆதரவாக ஜோதிகா இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதையும் ட்ரோல் செய்தனர் நெட்டிசன்ஸ். எனவே தோல்வியில் இருந்து பாடம் கற்று கங்குவா 2 வது பாகம் இருக்குமாயின் அதை கருத்தில் கொண்டு முதல் பாகத்தில் இருந்த பிழைகளைப் படக்குழு சரிசெய்யும் என தெரிகிறது.

கங்குவா படம் பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள் செய்த வேலை!

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கங்குவா படம் பார்த்த அதிருப்தியில் இருந்த ரசிகர்கள் சூர்யா மன்றத்தைக் கலைத்துவிட்டு, சூர்யா மன்றம் என்று எழுதியிருந்த போஸ்டருக்கும் தீயிட்டு கொளுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது சூர்யா ரசிகர்கள் செய்த வேலையா எனத் தெரியவில்லை. ஆனால் இதற்கு விமர்சனமும், ஏன் இப்படி செய்கிறீர்கள், இதெல்லாம் ஓவரா இல்லை என கேட்டு கண்டனமும் குவிந்து வருகிறது.

சூர்யா தனது விடாமுயற்சியால் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். உடலை வருத்தி வாரணம் ஆயிரத்தில் நடித்த மாதிரி, கங்குவா-விலும் சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடித்திருக்கிறார்.

படக்குழுவும் அந்த பட்ஜெட்டுக்குள் தங்களால் முடிந்ததை செய்திருக்கிறார் என ஒரு தரப்பினர் கங்குவா படக்குழுவை பாராட்டி வருகின்றனர். கங்குவா உலகம் முழுவதும் ரூ.130 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தமிழகத்தில் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment