நயன்தாரா, விக்னேஷ் சிவன் கல்யாண ஆவணப்படம் நெட்பிலிக்ஸ் வலைதளத்தில் வெளியாகி அனைவரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தில் கல்யாண சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே காட்டப்படுகிறது. இது முழுக்க முழுக்க அவரது சுயசரிதை குறும்படமாக அமைந்துள்ளது.
கல்யாண ஆவணப்படத்தில் நயன்தாரா 20 வருட சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்றதையும், லேடி சூப்பர் ஸ்டாராக மாறியதையும் காட்டுகிறார்கள். இந்த வீடியோவில் அவர் கடந்து வந்த பாதையில் சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களால் ஏற்பட்ட தாக்கத்தையும், அதன் மூலம் தான் பெற்ற பெயர்களையும் அடியோடு மறைத்து விட்டார்.
நயன்தாரா சினிமா கேரியரில் பிரபுதேவா, சிம்பு, தனுஷ் மூன்று பேரும் முக்கிய பங்காற்றியவர்கள். ஆரம்பத்தில் நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்தார். கல்யாணத்துக்குப் பிறகு பிரபுதேவா நயன்தாரா நடிப்பதற்கு முட்டுக்கட்டைகள் போட்டதால் அவரிடம் தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதைக் கூட அவரது ஆவணப்படத்தில் காட்டுகிறார்.
சிம்பு, தனுஷ் பற்றிய குறிப்புகள் அதில் இல்லை. நயன்தாரா சினிமாவில் இந்த இடத்திற்கு வர முக்கிய காரணமாய் இருந்தவர் சிம்பு. ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்தனர். சிம்பு, நயன்தாராவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வைத்துள்ளார். இருந்தாலும் இந்த காதல் ஈகோ பிரச்சனையால் முடிவுக்கு வந்தது.
நயன்தாரா, தனுஷ் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. யாரடி நீ மோகினி படம் இவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரியை ஏற்படுத்தினாலும் கிசுகிசுகளோடு அது முடிவடைந்தது. இந்த படத்தில் ஏற்பட்ட நெருக்கம் நயன்தாரா, தனுசை வீட்டிற்கு அழைத்து செல்லும் அளவிற்கு உண்டானது.
நயன்தாரா என்ன சொன்னாலும் தனுஷ் கேட்பாராம். யாரடி நீ மோகினி பட வெற்றிக்குப் பின் நயன்தாரா தனுஷிடம் அந்த படத்தில் பணியாற்றிய அனைத்து அசிஸ்டன்ட் இயக்குனர்களுக்கும் பைக் வாங்கி கொடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு எந்த ஒரு தடையும் சொல்லாமல் தனுஷ் அனைவருக்கும் பைக் வாங்கி கொடுத்துள்ளார். இப்படி சிம்பு தனுஷ் செய்த எல்லாத்தையும் அந்த சுயசரிதை படத்தில் காட்டவில்லை.