அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம், எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். இது ஜன நாயக நாடு என்பதால் எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு. சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்யைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் ஷூட்டிங்கிற்கான கட்டணத்தை குறைத்து அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் நடிகர் பார்த்திபன். இச்சந்திப்புக்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
புதிய கட்சி தொடங்க ஆர்வம் – பார்த்திபன்
அப்போது அவர் கூறியதாவது; தனுஷ், நயன்தாரா மோதல் இந்தியா கிரிக்கெட் மேட்ச் போன்று சுவாரஸ்யமாக இருக்கிறது என்று கூறினார். ஒரு பார்வையாளராக இருந்து அதனை ரசிப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் இடையே விவாகரத்து அதிகரித்துள்ளது கவலையளிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசையைத் தவிர வேறெதுவும் தெரியாது. அவர் நல்ல மனிதர் என்று அவரது மனைவியே கூறியுள்ளார் என்று கூறினார்.
மேலும், அரசியல் எழுச்சி பெற்றுள்ள விஜய், ஆளுங்கட்சியான திமுகவை எதிர்ப்பதுதான் சரி. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் அப்போதைய ஆளுங்கட்சியை எதிர்த்தே அரசியலில் வென்றார். ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். அதனால் விஜய் திமுகவை எதிர்ப்பதில் தவறில்லை என்று கூறினார்.
சினிமா விவகாரம், விஜய்யின் அரசியல் பற்றி பேசிய பார்த்திபன், தனது அரசியல் வருகையையும் வெளிப்படுத்தியுள்ளார். அதில், அரசியல் மீது எனக்கும் ஆர்வம் இருக்கிறது. அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற ஆசையுள்ளதால் ஒரு கட்சியை தொடங்குவேன். ஆனால் வரும் 2026 தேர்தலில் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் கருத்துக்குப் பாராட்டு
ஏற்கனவே நடிகர்கள், சரத்குமார், விஜயகாந்த், பாக்யராஜ், கார்த்தி, விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், பார்த்திபனும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பது சினிமாத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தவெக தலைவர் விஜய், திமுகவை எதிர்ப்பது பற்றி இதுவரை சினிமா பிரபலங்கள் யாருமே கருத்துக் கூறாத நிலையில்