தியேட்டரில் பலத்த அடி வாங்கிய கங்குவா.. OTT ரிலீஸ் எப்போது? அங்கேயாவது கல்லா கட்டுமா?

கங்குவா படத்திற்கு நெட்டிசன்களும் ரசிகர்களும் கொடுத்த எதிர்மறையான விமர்சனங்கள் மாதிரி இதுவரை வேறு எந்த படத்திற்கும் அமைந்ததில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவான படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, யோகிபாபு, நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

பெரிய பட்ஜெட்டில், பல கோடி பொருட்செலவில் உருவான இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும். உலகம் முழுவதும் 11500 ஸ்கிரீன்களில், 38 மொழிகளில் இப்படம் உருவாகிறது. வசூலில் 1000 கோடி மேல் குவிக்கும் என்றெல்லாம் இப்பட புரமோசனின் கூறினர் படக்குழுவினர்.

தியேட்டரில் நெகட்டிவ் ரெஸ்பான்ஸ், ஓடிடி ரிலீஸில் தேறுமா?

ஆனால், படம் ரீலீஸான முதல் நாளே முதல் ஷோவிலேயே இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் குவிய ஆரம்பித்தன. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று தியேட்டரில் ஓடி வரும் நிலையில் இப்படம் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலையே பெற்றுள்ளதால் படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல், இந்த ஆண்டு வெளியான படங்களில் இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் கங்குவா படத்திற்காக படக்குழுவினரின் முயற்சி, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முன்னெடுப்பு இதெல்லாம் சினிமா விமர்சகர்களும் , ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கங்குவா படம் டிசம்பர் 2 வது வாரத்தில் ஓடிடியில் ரிலீஸாகும் என தெரிகிறது. அமேசான் பிரைம் கங்குவா படத்தை 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது, தியேட்டரில் படம் பார்ப்பது வேறு அனுபவம், வீட்டில் இருந்தபடியே ஸ்கிரினில் ஓடிடி மூலம் படம் பார்ப்பது வேறு அனுபவம் என்பதால் இப்படம் ஓடிடியில் பார்வையாளரின் அபிமானத்தைப் பெறுமா? என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment