தனுஷ் தற்போது தமிழ் திரையுலகில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வளம் வருகிறார். ஒரு புறம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மறுபுறம் இயக்குனர் அவதாரம் எடுத்து, அதிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்.
இன்னொரு புறம், நயன்தாராவுக்கு நோட்டீஸ் கொடுத்து அலறவிடுகிறார். இதற்க்கு நடுவில் விவாகரத்து பஞ்சாயத்து என்று, மூச்சு விட நேரமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஒரு படத்தில் இவர் நடித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், அடுத்த படத்துக்கான அழைப்பு வந்தால், அதையும் விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்.
அப்படி தற்போது வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் ஒன்றை நடித்துக்கொடுத்திருக்கிறார் தனுஷ். வேல்ஸ் நிறுவனத்துக்கு உடனடி கால்ஷீட் கொடுத்துள்ளார்.
ஆடிப்போன தயாரிப்பாளர்கள்
இப்படி தன்னுடைய பிசி schedule-க்கு நடுவிலும் உடனடி கால்ஷீட்டை வேல்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளார். ஆனால் இதற்க்கு அவர் வாங்கிய சம்பளத்தை கேட்டால் ஆடிப்போய்விடுவீர்கள். ஏன், தயாரிப்பு நிறுவனமே ஒரு நிமிடம் மூச்சு பேச்சில்லாமல் கிடைத்திருக்கும். தனுஷ் கொடுத்த உடனடி கால்ஷீட்-க்கு அவர் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இதற்க்கு நடுவில், தான் பைனான்ஸ் செய்யும் நிறுவனத்தில் ஒன்றான மதுரை அன்பு நிறுவனத்தின் கீழும் நடிக்க முற்பட்டுள்ளார் தனுஷ். இந்த நிலையில், எந்த படத்தை முதலில் இவர் கொடுப்பார் என்ற கேள்வி வந்துள்ளது. மேலும், இவர் மீது ரெட் கார்டு பிரச்சனையை வேறு, தலைக்கு மேல் காத்தியாகி தொங்கிக்கொண்டு இருக்கிறது.
இப்படி இருக்க மதுரை அன்பை இவரால் பகைத்துக்கொள்ள முடியாது. அவருக்கு படம் பண்ணி கொடுத்தால் தான் இவர் மீது தயாரிப்பு சங்கத்துக்கு ஒரு இரக்கம் வரும். அதனாலும் இந்த முடிவை தனுஷ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.