வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சந்தியா ராகம் சீரியலில் ஜானகியை பெருமைப்படுத்த மாயா செய்த காரியம்.. கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறும் சீனு

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், மாயா மற்றும் சீனுவை பிரிப்பதற்கு பத்மா என்னதான் சதிகளை பண்ணினாலும் சீனு மனதிற்குள் மாயா மீது இருக்கும் காதலால் யாரும் இவர்களைப் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப இவர்களுடைய திருமண பந்தம் ரொம்பவே உறுதியாகிவிட்டது.

இருந்தாலும் சீனு மனதில் தற்போது மாயா மீது கோபம் இருப்பதால் இதை வைத்து பிரச்சினையை பெருசாக்கி இரண்டு பேருக்கு இடையே விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்று பத்மா நினைக்கிறார். அதே மாதிரி வலுக்கட்டாயமாக தாலி கட்டிய கதிரிடமிருந்து தனத்தை பிரிக்க வேண்டும் என்று புவனேஸ்வரி, கார்த்திக் மூலம் ப்ளான் பண்ணி வருகிறார்.

ஆனால் தனம் எனக்கு அமைந்த வாழ்க்கை பிடித்ததோ பிடிக்கலையோ, இதுதான் என்னுடைய வாழ்க்கை. இதில் இனி உங்களுக்கு இடம் இல்லை என்று தெள்ளத் தெளிவாக கார்த்திக்கிடம் சொல்லிவிட்டார். இப்படி தனம் மற்றும் சீனு தற்போது கோபமாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறிக்கொண்டு கதிர் மற்றும் மாயாவை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் இதற்கு இடையில் ரகுராமை பழிவாங்க வேண்டும் என்று புவனேஸ்வரி பண்ணும் சூழ்ச்சியிலிருந்து மாயா, ரகுராம் குடும்பத்தை காப்பாற்றி விடுவார். அந்த வகையில் ஊர் தர்மகர்த்தா மரியாதையை ரகுராமுக்கு கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் ரகுராம் தற்போது இருக்கும் மனநிலையில் இதில் கலந்து கொள்ள விருப்பப்படவில்லை. அதனால் புவனேஸ்வரி இந்த மாலை மரியாதை நமக்கு வந்து சேர வேண்டும் என்று கோவிலுக்கு பரிவட்டம் கட்ட போய்விட்டார்.

பெரியப்பா குடும்பத்திற்கு சேர வேண்டிய மரியாதை நிச்சயம் பெரியப்பா குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தான் கிடைக்க வேண்டும் என்று மாயா எடுத்த முடிவு தான் ஜானகியை அங்கே கூட்டிட்டு போய் அந்த மரியாதையே பெரியம்மாவுக்கு கொடுங்கள் என்று ஜானகியை கவுரப்படுத்திவிட்டார். அந்த வகையில் மாயா இருக்கும் வரை ரகுராம் குடும்பத்தை யாராலும் எதுவும் பண்ண முடியாது.

Trending News