புஷ்பா 2 படம் ஆரம்பித்ததில் இருந்தே பஞ்சாயத்து தான். அல்லு அர்ஜூனுக்கும் படத்தின் இயக்குனர் சுகுமாருக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்.. இவர்கள் சண்டையில் பாதிக்கப்படுவது என்னவோ, படத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் பண்ண இருக்கிறார்கள்.
ஒருபக்கம் மழை வேறு வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறது. இதற்க்கு நடுவில் தான் புஷ்பா 2 படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். ஆனால் இன்னும் இந்த படத்தில், சில விடுபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை. தற்போது நடந்துகொண்டு இருக்கிறது..
புஷ்பா 2 படத்திலிருந்து அடுத்த நீக்கம்
ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தையும் முடித்த நிலையில், BGM சரியாக இல்லை என்று கூறி தயாரிப்பு நிறுவனமும் அல்லு அர்ஜுனும் திட்டம் போட்டு, DSP-யை வெளியேற்றினர். இதை தொடர்ந்து, வரிசையாக அவர்கள் தயாரிப்பில் உள்ள எல்லா படத்திலிருந்தும் நீக்கினார்கள்.
அவருக்கு பதிலாக சாம்.சி.எஸ் படத்தில் இணைந்தார். DSP-யம் இயக்குனரும் ரொம்ப கிளோஸ். இவரை படத்திலிருந்து நீக்குவதில் இயக்குனருக்கு உடன்பாடு இல்லை. இந்த நிலையில், அவர் பேச்சை மீறி DSP-யை நீங்கியதால், பதிலுக்கு இயக்குனர் ஒரு வேலையை பார்த்துள்ளார்.
அவர் படத்தின் எடிட்டரை நீக்கி இருக்கிறார். படத்தின் 90 சதவீத எடிட்டிங் வேலைகள் முடிந்திருக்கும் நேரத்தில் இதை இயக்குனர் செய்தது, அல்லு அர்ஜுனுக்கு கோவத்தை கிளப்பியுள்ளது.
அல்லு அர்ஜுன் மறுப்பு தெரிவித்தும் இதை இயக்குனர் சுகுமார் செய்துள்ளார். இதை தொடர்ந்து இதுவரை பணியாற்றிக்கொண்டிருந்த எடிட்டர் ரூபனை நீக்கி அவருக்கு பதிலாக எடிட்டர் நவீன் நூலியை கமிட் செய்துள்ளார். மொத்தத்தில் இவர்கள் பஞ்சாயத்தில், மற்றவர்கள் தான் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.