விக்னேஷ் சிவனுக்கு பொறாத காலம் ஆரம்பித்தது போல தான் தெரிகிறது. நயன்தாரா தனுஷ் பிரச்சனையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடையாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். பொறாததுக்கு ஒரே ஸ்டோரி.. ஆல் கிளோஸ் என்பது போல இவர் போட்ட ஒரு ஸ்டோரியை கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டனர் நெட்டிசன்கள்.
வாழு வாழ விடு என்று விக்னேஷ் சிவன் ஸ்டோரி போட்டதை தொடர்ந்து, “உங்களுக்கு வாழ்க்கையை கொடுத்ததே தனுஷ் தான் ” என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் எதிர்ப்பு வலுவாக இருப்பதை கவனித்த பிறகு, தனது ஸ்டோரியை டெலீட் செய்துவிட்டார்.
அக்கௌன்ட் Deactivate
ஆனாலும் நெட்டிசன்கள் இவரை சும்மா விடவில்லை. இவரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி படாத பாடு படுத்தி எடுத்து விட்டனர். அதுவும், நயன்தாரா கணவர், இல்ல.. இவர் மனைவி என்றெல்லாம் கூறி மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
இப்படி பட்ட சூழ்நிலையில், திடீரென, சகவாசம் வேண்டாம் என்று கூறி தனது x வலைதள அக்கௌன்ட்டை De-activate செய்திருக்கிறார். காரணம், சமீபத்தில் நடந்த ஒரு பேட்டி தான். அதில் இந்தாண்டு குறிப்பிடத்தக்க வரவேற்பு பெற்ற இயக்குனர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்று அதற்கான பேட்டி ஒன்று நடந்துள்ளது.
இதை தொடர்ந்து நெட்டிசன்கள் ..”இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியிடாத இவர் எப்படி குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் வருவார் ” என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். மேலும் விக்னேஷ் சிவன் கணக்கில், ஆபாசமாக நிறைய பேர் கமெண்ட் செய்து வந்துள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி, இந்த முடிவை எடுத்துள்ளார்.