திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

யாரை குத்தம் சொல்றதுன்னு தெரியாம முழிக்கும் லைக்கா.. விடாமுயற்சிக்கு பேரமௌண்ட் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு

விடாமுயற்சி படம் 2025 பொங்கல் தினத்தன்று வெளி வருகிறது. இந்த படம் பிரபல ஆங்கில படத்தின் தழுவல் தான்.1997ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேக் டவுன்” என்ற அமெரிக்கன் ஆக்சன் திரில்லர் படத்தின் கதையை மையமாக வைத்து தான் அஜித்தின் விடாம முயற்சி படத்தை இயக்கியுள்ளார் மகிழ் திருமேனி.

இப்பொழுது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பிரேக் டவுன் படத்தின் கதை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே இந்த கதைக்கு அனுமதி வாங்குமாறு அஜித் லைக்கா மற்றும் மகிழிடம் கூறியிருந்தாராம். அப்பொழுது சரிகட்டி பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என மெத்தனமாய் இருந்து விட்டார்களாம்.

புதிதாய் வாங்கிய காரோடு, வேறு ஒரு இடத்திற்கு ட்ரான்ஸ்பர் ஆகும் பொழுது நெடுஞ்சாலையில் நடக்கும் ஆக்சன் திரில்லர் கதை இது. பிரேக் டவுன் படத்தின் கதையை சிறிது பட்டி டிங்கரிங் பார்த்து அப்படியே இயக்கியுள்ளார் மகிழ் திருமேனி. இப்பொழுது இந்த படத்தின் கதை பிரேக் டவுன் படம் தான் என்பதை ஹாலிவுட்ல உறுதி செய்து விட்டனர்.

அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் பேரமௌண்ட் பிக்சர்ஸ் இப்பொழுது இதற்கு நஷ்ட ஈடு கேட்டு லைக்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது சுமார் 15 மில்லியன் வேண்டுமென கேட்டுள்ளனர், இந்திய மதிப்பின்படி சுமார் 150 கோடிகள். இதனால் லைக்கா நிறுவனம் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது.

இந்தப் படத்தின் கதையவே லைக்கா நிறுவனம் தான் மகிழ் மற்றும் அஜித்திடம் கூறியுள்ளது. அஜித் கால் சீட் இருக்கிறது என அவசர அவசரமாக பிரேக் டவுன் படத்தின் கதையை கூறி தயாரித்து வந்துள்ளனர். இதனால் இப்பொழுது யாரை குறை சொல்வது என முழித்து கொண்டிருக்கிறது லைக்கா. படம் முழுவதுமாக முடிந்த பிறகு தான் இந்த பிரச்சனை தலை தூக்கி உள்ளது.

- Advertisement -spot_img

Trending News