Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் 64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று அவரது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது. ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்த சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனாலும் இப்போதும் இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி பாலிவுட்டில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படம் உருவானது. இந்த சூழலில் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் ஆன இன்று சில்க் ஸ்மிதா குயின் ஆப் சவுத் என்ற புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேலும் இந்த படத்தின் கிளிப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. ஜெயராம் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் எஸ்டிஆர்ஐ சினிமா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இதில் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில் சந்திரிகா ரவி நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளில் வெளியான குட் நியூஸ்
இவர் ஏற்கனவே தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சில்க் ஸ்மிதா குயின் ஆஃப் சவுத் படம் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
மேலும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் அன்று இந்த கிளிப்ஸ் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றளவும் எவர்கிரீன் குயினாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை சில்க் ஸ்மிதா பிடித்திருக்கிறார்.
அதுவும் தன்னுடைய இளமையான காலத்தில் அதே இளமையான தோற்றத்துடன் அவர் இந்த உலகை விட்டு பிரிந்ததால் இன்னும் அதே கவர்ச்சி ததும்பும் அழகுடன் தான் மக்கள் மனதில் இருக்கிறார். இன்னும் அடுத்த தலைமுறை வந்தாலும் சில்க் ஸ்மிதாவின் புகழ் மறையாது.