செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

பாலிவுட் காசு மட்டும் வேணும், ஆனா அத மட்டும் செய்ய மாட்டேன்.. அல்லு அர்ஜுன் ஓபன் டாக்

தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜூன், 2021 ஆம் ஆண்டு, புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக அறிமுகமானார். அதற்கு முன் அவரது ஆர்யா உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்திருந்தாலும் புஷ்பா அவரை இந்தியா முழுவதும் கொண்டு சேர்ந்துள்ளது.

அப்படத்தில் நடித்த தற்காக தெலுங்கு சினிமாவில் முதல் நடிகராக தேசிய விருது பெற்றுச் சாதனைபடைத்தார். இப்படம் வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இதையடுத்து. புஷ்பா தி ரூப் என்ற பெயரில் இரண்டாம் பாகம் 3 ஆண்டுகளாகத் தயாராகி வந்தது.

அதன்படி, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா – ஸ்ரீலீலா – ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா தி ரூ. புஷ்பா பட த்தின் 2 வது பாகம் என்ற போதிலும் முதல் படத்தைக் காட்டிலும் அதிக எதிர்பார்ப்பை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாட்னாவில் புஷ்பா 2 டிரெட்யிலர் ரிலீசின் பல லட்சம் பேர் பங்கேற்றனர். யூடியூப்பில் இந்த டிரெயிலர் அதிக வியூஸை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் நிலையில் இப்படத்தின் புரமோசன் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.

படத்தில் நடித்தால் மட்டும் போதாது, புரமோசன் இருந்தால் தான் அது மக்களைச் சென்றடையும் என்பதில் தெலுங்கு ஹீரோக்கள் உறுதியாக உள்ள நிலையில் அல்லு அர்ஜூனுன் இந்தியா முழுவதும் ரசிகர்களை சந்தித்து புரமோசன் செய்து, இப்படத்தின் சுவாரஸ்ய தகவல், தன் அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட்டில் நடிக்க மாட்டேன்.. அப்புறம் டப்பிங் படங்கள் மட்டும் ஏன்?

இந்த நிலையில், நேற்று மும்பையில் இப்பட புரமோசன் நடந்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அல்லு அர்ஜூன், தனது தனது படங்கள் பாலிவுட்டி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனது பாலிவுட் எண்ட்ரி பற்றி பேசியிருந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது; முன்னதாக, பாலிவுட் படங்களில் ஏன் நடிப்பதில்லை என பலரும் கேட்கின்றனர். ஆனால், நான் பாலிவுட் படங்களில் நடிக்கப் போவதில்லை. அதேசமயம், தேவிஸ்ரீ பிரசாத் ஏன் பாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதில்லை என அவரையும் கேட்கின்றனர். நால் பாலிவுட் படத்தில் நடித்தால் அவரும் அப்படத்துக்கு இசையமைப்பதாக தெரிவித்ததாக கூறினார்.

இது சர்ச்சையான நிலையில், இதற்கு சினிமா விமர்சகர்கள் பிறகு இவர்களின் படங்கள் இந்தியில் ஏன் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது என கேள்வி எழுப்பினர்.

இந்தியில் அறிமுகமாகும் அல்லு அர்ஜூன்?

புஷ்பாவை அடுத்து புஷ்பா 2க்கும் பாலிவுட்டில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. பாலிவுட் பட த்தில் எண்ட்ரி கொடுப்பது கடினம் என அல்லு அர்ஜூன் முன்பு கூறியதாக நேற்று தெரிவித்த நிலையில், புஷ்பா 2 படத்துக்குப் பின் அந்த நிலை மாறும் என தெரிகிறது. அவர் நேரடி இந்திப் படத்திலு கூட நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News